பொது செய்தி

தமிழ்நாடு

அதிக வேட்டி உற்பத்தி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு-பெடல் தறி நெசவாளர்களுக்கு அதிகளவு வேட்டி உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிட முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்;கடலுார் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கே.என்.பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, புதுப்பேட்டை, வண்டிப்பாளையம்

நடுவீரப்பட்டு-பெடல் தறி நெசவாளர்களுக்கு அதிகளவு வேட்டி உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிட முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்;கடலுார் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கே.என்.பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, புதுப்பேட்டை, வண்டிப்பாளையம் பகுதிகளில் 400 க்கும் மேற்பட்ட பெடல் தறி மூலம் அரசின் இலவச வேட்டி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர்.2021 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பெடல் தறி மூலம் 1,88,000 வேட்டி உற்பத்தி செய்ய கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசுக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் 208 தறிகளுக்கு மட்டும் 88,000 வேட்டிகளை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது போதுமானதல்ல. இதனை மாற்றி கூடுதலாக 2 லட்சம் வேட்டிகளை உற்பத்தி செய்ய திட்ட ஆணை வெளியிட வேண்டும்.வடகிழக்கு பருவமழை காலத்தில் குழிதறியில் மழைநீர் ஊற்று எடுத்து நெசவு தொழில் பாதிக்கிறது. இந்த காலத்தில் வேலையில்லா கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X