போலீஸ் செய்திகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஆபாச படம் எடுத்தவர் கைதுசிவகாசி: விஸ்வநத்தம் முருகன் காலனியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி 28. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதி ஜெயக்குமார் 43, ஸ்கோரிங்கில் வேலை பார்த்த போது தவறான தொடர்பு ஏற்பட்டது. பாண்டிசெல்வி வீட்டிற்கு விஷயம் தெரிந்ததால் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஜெயக்குமாரும், பாண்டிசெல்வியும் உல்லாசமாக இருந்ததை ஜெயக்குமார் வீடியோ எடுத்து

ஆபாச படம் எடுத்தவர் கைது
சிவகாசி: விஸ்வநத்தம் முருகன் காலனியை சேர்ந்தவர் பாண்டிசெல்வி 28. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதி ஜெயக்குமார் 43, ஸ்கோரிங்கில் வேலை பார்த்த போது தவறான தொடர்பு ஏற்பட்டது. பாண்டிசெல்வி வீட்டிற்கு விஷயம் தெரிந்ததால் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் ஜெயக்குமாரும், பாண்டிசெல்வியும் உல்லாசமாக இருந்ததை ஜெயக்குமார் வீடியோ எடுத்து வைத்திருந்தார். ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியும் அவர் வேலைக்கு செல்ல வில்லை. ஆபாச வீடியோவை அவர் கணவர், மற்றவர்களுக்கு ஜெயக்குமார் அனுப்பியுள்ளார். கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

காரியாபட்டி: மல்லாங்கிணறு அயன்ரெட்டியாபட்டியில் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீரை பெற பெண்கள் முண்டியடித்தபோது அதே பகுதியை சேர்ந்த ருக்குமணி 65, , அண்ணாநகரை சேர்ந்த பவுன்த்தாய் 68, ஆகியோர் அணிந்திருந்த தலா 5 பவுன் செயின் திருடப்பட்டது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிற்கு வெட்டுதளவாய்புரம்: சுந்தரராஜபுரம் மாசான கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி 66. இவரது மனைவி சுப்பு 62. இவர்கள் வீடு அருகே ஆனந்தகுமார் குடும்பத்தினர் குழாய் பதித்தது தொடர்பாக பிரச்னை இருந்தது. இந்நிலையில் ஊராட்சி மூலம் சாக்கடை குழி ஆனந்தகுமார் வீட்டை ஒட்டி தோண்டப்பட்டது.

இதற்கு குருசாமிதான் காரணம் எனக்கூறி நடந்த பிரச்னையில், ஆனந்தகுமார் வாளால் சுப்பு தலையில் வெட்டியும், குரு சாமியை செங்கல் கொண்டும் தாக்கினார். சேத்துார் ஊரக போலீசார் ஆனந்தகுமார், உறவினர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X