ராகுலின் 'பேஸ்புக்' பதிவுகள் நீக்கம்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி ;'டுவிட்டர்' வலை தளத்தை தொடர்ந்து, காங்., - எம்.பி., ராகுலின், 'பேஸ்புக்' பக்கத்திலும், பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புகைப்பட பதிவுகள் நேற்று நீக்கப்பட்டன.சமீபத்தில், டில்லியை சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பின், அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல்
ராகுலின் 'பேஸ்புக்' பதிவுகள் நீக்கம்


புதுடில்லி ;'டுவிட்டர்' வலை தளத்தை தொடர்ந்து, காங்., - எம்.பி., ராகுலின், 'பேஸ்புக்' பக்கத்திலும், பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புகைப்பட பதிவுகள் நேற்று நீக்கப்பட்டன.

சமீபத்தில், டில்லியை சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பின், அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு தொடர்பான, படங்களை, 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராகுல் பகிர்ந்தார். அவற்றில், சிறுமியின் பெற்றோர் முகம் மறைக்கப்படவில்லை.
'போக்சோ' சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். இதையடுத்து, ராகுல் பகிர்ந்த அந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதோடு, அந்த பதிவுகளை பகிர்ந்த ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. எனினும், அந்த கணக்குகள் பின்னர் விடுவிக்கப்பட்டன.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் மட்டும் அந்த பதிவுகள் நீக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து, அந்த பதிவுகளை நீக்கி நடவடிக்கை எடுக்கக்கோரி, பேஸ்புக் நிறுவனத்திற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தது.இந்நிலையில், ராகுலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்த சிறுமியின் பெற்றோர் புகைப்படங்கள் நேற்று நீக்கப்பட்டன. இது குறித்து, ராகுல் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் தகவல்

தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
21-ஆக-202117:26:31 IST Report Abuse
KALIHT LURA அவமானம்..... அவமானம்...........
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-ஆக-202115:27:55 IST Report Abuse
Vena Suna மக்களுக்கு உண்மையாக உழைக்க ராகுல் மற்றும் காங்கிரஸ் பாடுபட்டால் முன்னேற்றம் காணலாம்...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஆக-202111:28:00 IST Report Abuse
Girija கடைசியில் பேஸ் புக் புண்ணியம் கட்டிக்கொண்டது இந்தியாவின் மானத்தை வாங்கும் உளறல்களை நீக்கி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X