பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கியோரின் நகைகளை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், விபத்தில் சிக்கியவர்களின் 10 சவரன் நகைகளை, உரியவரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொது மக்கள் பாராட்டினர்.திருவாரூரை சேர்ந்தவர் சுகுமார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருவாரூக்கு காரில் சென்றார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் கார் விபத்துக்குள்ளானது. சுகுமார், டிரைவர் மற்றும் இரண்டு

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், விபத்தில் சிக்கியவர்களின் 10 சவரன் நகைகளை, உரியவரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொது மக்கள் பாராட்டினர்.

திருவாரூரை சேர்ந்தவர் சுகுமார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருவாரூக்கு காரில் சென்றார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் கார் விபத்துக்குள்ளானது. சுகுமார், டிரைவர் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். தகவலறிந்த, கிள்ளை 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பாலமுருகன், ஆம்புலன்ஸ் டிரைவர் பாலு முதலுதவி அளித்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்கள் ஹேண்ட் பேக்கை, ஆம்புலன்சில் வைத்துவிட்டு சென்றனர். அதனை ஆம்புலன்ஸ் ஊழியர்கள், திறந்து பார்த்தப்போது, 10 சவரன் நகை இருந்தது. அதனை சுகுமாரிடம் ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X