அருப்புக்கோட்டை: சீரான தலைமையின் கீழ் இயங்கும் நிர்வாகம் செவ்வனே இருக்கும் என்பது வரலாற்று உண்மை. இது அரசு துறைகளுக்கும் பொருந்தும். அரசு துறையில்கூட தலைமை பங்கு வகிப்பவரும், அவரின் கீழ் இயங்குபவர்களும் புரிதலுடன் செயல்பட்டால் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கும்.
அந்தவகையில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக உள்ள பாலமுருகன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள், போலீசார் திறமையாக செயல்பட்டு மக்களுக்கு பல வகைகளில் உதவுகின்றனர்.முதல் துவக்கமே இயற்கை சூழலுடன் குளுகுளு மரங்கள், பறவைகளின் கீச்..கீச்.. சப்தத்துடன் வருவோரை இனிமைாக வரவேற்கும் ஸ்டேஷன். எந்தவித பயம், தயக்கமின்றி மக்கள் வந்து செல்லும் வகையில் இன்முகத்துடன் வரவேற்கும் போலீசார் என்ற சூழலுடன் ஸ்டேஷன் உள்ளது.
நகரில் மக்களின் பாகாப்பு கருதி நகாரட்சி 36 வார்டுகளில் ஒவ்வொரு வார்டிற்கும் ஒரு போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு அப்பகுதியில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு என இன்ஸ்பெக்டர் சாதிக்கிறார் .குற்ற செயல்களை தடுக்க நகரின் எல்லை பகுதியில் அவுட்போஸ்ட் ,அதில் சி.சி,டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் 'மானிட்டரிங்'. இதுதவிர நகரின் முக்கிய சந்திப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
இரவு, பகல் எந் நேரமும் போக்குவரத்து சிக்னல் லைட்டுகள் மிளிருகின்றன.இதோடு சாலை விதிகளை மீறுபவர்கள், குற்ற செயல்களை உடனுக்குடன் கண்டு பிடிக்க இங்குள்ள எஸ்.ஐ., களுக்கு 'பாடி வோன் கேமராக்கள்' வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமரா எதிரில் உள்ள வாகன ஓட்டிகளை தெளிவாக படம் எடுக்கும். போலீசார், வாகன ஓட்டிகள் உரையாடல்கள் துல்லியமாக பதிவாகும். 15 அடி துாரத்தில் நின்று பேசினால் கூட ஒலி, ஒளியை பதிவு செய்ய முடியும். இதனுடன் ஜி.பி.எஸ்., கருவியையும் பொருத்தி கொள்ளலாம். இதன் மூலம் மேல் அதிகாரிகளும் கண்காணிக்கலாம்.இதன் மூலம் உண்மை நிலையை அறிய அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் மனம் குளிருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE