கல்வி உதவித்தொகை: எம்.எல்.ஏ., வழங்கல்| Dinamalar

கல்வி உதவித்தொகை: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஆக 21, 2021
சிதம்பரம்-சிதம்பரத்தில் மாற்று திறனாளி மகனின் தொழில் படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை எம்.எல்.ஏ., பாண்டியன் வழங்கினார்.சிதம்பரம் தொகுதி, அரியகோஷ்டி, மேலத்தெரு மாற்றுத் திறனாளி முருகன்-வளர்மதி தம்பதியின் மகன் முத்தமிழ்செல்வன் கல்லுாரி படிப்பிற்கு உதவ வேண்டும் என எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாணவருக்கு கல்வி உதவி தொகை

சிதம்பரம்-சிதம்பரத்தில் மாற்று திறனாளி மகனின் தொழில் படிப்பிற்கு கல்வி உதவித்தொகையை எம்.எல்.ஏ., பாண்டியன் வழங்கினார்.சிதம்பரம் தொகுதி, அரியகோஷ்டி, மேலத்தெரு மாற்றுத் திறனாளி முருகன்-வளர்மதி தம்பதியின் மகன் முத்தமிழ்செல்வன் கல்லுாரி படிப்பிற்கு உதவ வேண்டும் என எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் மாணவருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடந்தது. எம்.எல்.ஏ., பாண்டியன், மாணவன் முத்தமிழ்செல்வனுக்கு 3 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை வழங்கினார். மாற்று திறனாளிகளின் வாழ்வாதார வழி காட்டுதல் சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், முருகன், கணேஷ், ஆதிமூலம், ரங்கசாமி, ரவி, நாகராஜ் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X