பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலையில் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் உழவர்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கும்,

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் உழவர்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும், ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில், வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை வழங்கப்படுகிறது.பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு, 10,000 மற்றும் 1,800 ரூபாய் ஜி.எஸ்.டி., ஆக வசூலிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர, busieness@tnau.ac.in / eximabdtnau@gmail.com. என்ற இணைய முகவரியிலும், 0422-6611310, 9500476626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X