மலேரியாவை கட்டுப்படுத்த கலெக்டர்களுக்கு,உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலேரியாவை கட்டுப்படுத்த கலெக்டர்களுக்கு,உத்தரவு

Added : ஆக 21, 2021
Share
சென்னை:'மலேரியா இல்லாத மாநிலமாக, தமிழகத்தை மாற்றுவதற்கான இலக்குடன் செயல்பட வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சர்வதேச கொசு ஒழிப்பு தினத்தை ஒட்டி, மாவட்ட கலெக்டர்களுக்கு, செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சர்வதேச கொசு ஒழிப்பு தினத்தை ஒட்டி, இந்தாண்டு மலேரியாவை முழுமையாக ஒழிப்பதற்கான இலக்கு

சென்னை:'மலேரியா இல்லாத மாநிலமாக, தமிழகத்தை மாற்றுவதற்கான இலக்குடன் செயல்பட வேண்டும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கொசு ஒழிப்பு தினத்தை ஒட்டி, மாவட்ட கலெக்டர்களுக்கு, செயலர் ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சர்வதேச கொசு ஒழிப்பு தினத்தை ஒட்டி, இந்தாண்டு மலேரியாவை முழுமையாக ஒழிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, மலேரியா பாதிப்பு, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே காணப்படுகிறது. அதேவேளையில், 'டெங்கு, சிக்குன் குனியா' போன்ற கொசுக்களால் பரவும் மற்ற நோய்கள், மாநிலம் முழுதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அதை அகற்ற வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளில், எந்த சமரசமும் தொய்வும் இன்றி தொடர்ந்து செயல்பட வேண்டும்.மலேரியாவை பரப்பும், 'அனாபிலஸ்' என்ற வகை கொசுக்களையும், டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரசை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்களையும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் வைரஸ் பரப்பும், 'கியூலக்ஸ்' வகை கொசுக்களையும் ஒழிப்பது மிகவும் முக்கியமானது.

தேங்கியிருக்கும் நல்ல நீர் மற்றும் கழிவு நீர் ஆகியவற்றை உடனே அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும். இது தொடர்பான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X