கொச்சியில் கூட வந்து விட்டது... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொச்சியில் கூட வந்து விட்டது...

Added : ஆக 21, 2021
Share
கோவை:கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையினை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க ம.தி.மு.க., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே மத்திய அரசால், 2011ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான, மத்திய அரசு அறிவித்த 18

கோவை:கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையினை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க ம.தி.மு.க., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே மத்திய அரசால், 2011ல் அறிவிக்கப்பட்டது. அப்போது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான, மத்திய அரசு அறிவித்த 18 நகரங்களின் பட்டியலில், கோவையை தவிர, அனைத்து நகரங்களிலும் தற்போது, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு விட்டது.கோவைக்கு அடுத்த நிலையிலிருந்த, கொச்சியில் கூட இந்த திட்டம் முழுமையடைந்து , பல ஆண்டுகளுக்கு முன்பே, மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வலியுறுத்தி, மத்திய அரசு அறிவித்த ஆண்டிலிருந்தே தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் மாநில அரசு மிகவும் மெத்தனமாக இருந்து வந்தது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த ஆட்சியில், விதி 110ன் கீழ் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.அதன் பின்பு திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசிடம் இந்த திட்டத்தை, எடுத்து சென்று தீவிரப்படுத்த தவறியதால், கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த திட்டம் என்பதால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தே தீர வேண்டும். எனவே, தமிழக முதல்வர், திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து, திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X