பொது செய்தி

தமிழ்நாடு

சாக்கடை அள்ள அனுமதி மறுக்கும் ரயில்வே : பரிதவிப்பில் பாரதியார் தெரு மக்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சாத்துார்--சாக்கடை அள்ள அனுமதி மறுக்கும் ரயில்வே ,வீடுகளுக்குள் புகும் விஷ பூச்சிகள், கொசுக்கடியால் நோய் பாதிப்பு என சாத்துார் பாரதியார் தெரு பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் சிமென்ட் ரோடு தோண்டி அகற்றப்படாமல் அதன் மேலேயே பேவர் பிளாக் பதிக்கப்பட்டதால் வீடுகளின் வாசல்களில் இரண்டு மூன்று அடி ஆழத்திற்கு சென்று விட்டது.இப்பகுதிஅருகில்தான்

சாத்துார்--சாக்கடை அள்ள அனுமதி மறுக்கும் ரயில்வே ,வீடுகளுக்குள் புகும் விஷ பூச்சிகள், கொசுக்கடியால் நோய் பாதிப்பு என சாத்துார் பாரதியார் தெரு பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் சிமென்ட் ரோடு தோண்டி அகற்றப்படாமல் அதன் மேலேயே பேவர் பிளாக் பதிக்கப்பட்டதால் வீடுகளின் வாசல்களில் இரண்டு மூன்று அடி ஆழத்திற்கு சென்று விட்டது.இப்பகுதிஅருகில்தான் ரயில் பாதை செல்கிறது.சாத்துார் பழைய படந்தால் ரோடு, மரிய ஊரணியில் இருந்து வரும் மழைநீர் ஓடை ரயில் பாதை கடந்துதான் வைப்பாற்றினை அடையும் நிலையால் ஓடை அடைக்கப்பட்டது. தற்போது ஓடையானது ரயில்பாதையொட்டி குடியிருப்பு வழியாக சென்று ஆற்றினை அடைகிறது.ரயில்வே இடத்தில் சாக்கடை செல்வதால் இதை சுத்தம் செய்ய ரயில்வே நகராட்சிக்கு அனுமதி மறுத்து வருகிறது. இதில் கொசு உற்பத்தியாகி கொசுக்கடியால் இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். இங்கு பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்த மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. தெருவிளக்கு வசதியும் குறைவாக உள்ளது.10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் ஆவதால் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X