தமிழ்நாடு

தவிர்க்கலாமே: தடை இருந்தும் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராஜபாளையம்-விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை இருந்தும் புழக்கம் குறைந்தபாடில்லை. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.இயற்கைக்கு கேடு விளைவித்து வரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 தொடக்கத்தில் தமிழக அரசு தடை விதித்தது. தொடங்கிய வேகத்தில் மிகுந்த கவனம்

ராஜபாளையம்-விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை இருந்தும் புழக்கம் குறைந்தபாடில்லை.

இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.இயற்கைக்கு கேடு விளைவித்து வரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 தொடக்கத்தில் தமிழக அரசு தடை விதித்தது. தொடங்கிய வேகத்தில் மிகுந்த கவனம் செலுத்திய அரசும், அதிகாரிகளும் இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை விதிகளும் ஏட்டளவிலே உள்ளது.

காற்று, மண், நீர் என தடுக்க இயலாத அழிவு பொருளாக வளர்ந்து நிற்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களும் முன்வர வேண்டும்.தற்போது சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள், இனிப்பகங்களில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் தாராளமாக புழங்கி வருகின்றன. உற்பத்தி நிலையில் இதற்கு தடை விதித்து விதி மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதித்தால் மட்டுமே இவற்றை கட்டுப்படுத்த முடியும்.இதற்கு அரசும் முறையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது
.தீவிரம் காட்ட வேண்டும்

மாநில அரசு தடைவிதித்த புதியதில் கடைகளுக்கு சீல் உள்ளிட்ட அபராதம் இருந்தது. தற்போது அது மங்கி விட்டது. இதை கட்டுப்படுத்த இதற்கு மாற்று பொருளான வாழை, பனை, பீங்கான், காகித பை, தாமிர இலை போன்ற பயன்பாட்டாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும், விற்பனை கடைகளுக்கும் தகுந்த ஊக்கமளித்து இவற்றை பிரபலப்படுத்த வேண்டும். மத்திய சுற்று சூழல் அலுவலகம் 2022 ஜூலை முதல் நடைமுறைக்கு கொண்டுவரும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தச்சட்டத்தால் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அதுவரை காத்திராமல் தற்போதே பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

.மணிகண்டன், சமூக ஆர்வலர், ராஜபாளையம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X