பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை தாவரப்பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்த யோசனை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்,-விவசாய நிலத்தில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் விவசாயிகள் பொதுவாக பயிர்சாகுபடியில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் வயலில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இவற்றை தவிர்க்க விவசாயிகள்

ராமநாதபுரம்,-விவசாய நிலத்தில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் விவசாயிகள் பொதுவாக பயிர்சாகுபடியில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் வயலில் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இவற்றை தவிர்க்க விவசாயிகள் தாவரபூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்தலாம்.இதன்படி வேப்பந்தழையை நன்செய் நிலங்களில் உரமாகவும், பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தலாம். வேப்பங்கொட்டை கரைசல் பூச்சிகொல்லியாக உள்ளது. ஆணைக்கொம்பன் ஈ, இலைச்சுருட்டுப்புழு, கதிர் நாவாய்பூச்சி ஆகியவற்றை அழித்துவிடலாம். இதேப்போல நொச்சிதழையும், வேப்பிலையும் கொதிக்க வைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்து வடிக்கட்டி நெற்பயிரில் தெளிக்கலாம் என ராமநாதபுரம் விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குனர் சக்திகணேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X