இந்திய துணை துாதரகம் சூறை ஆப்கனில் தலிபான் அராஜகம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆப்கனில் உள்ள இந்திய துணை துாதரகத்தை தலிபான்கள்சூறையாடி, முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய துாதரகம் உள்ளது. இது தவிர, காந்த ஹார், ஹீரட் உள்ளிட்ட மாகாணங்களில் நான்கு துணை துாதரகங்களும் உள்ளன.தலிபான்கள் வேவுகாபூலில் உள்ள இந்திய துாதரகத்தில் சில அதிகாரிகள் மட்டும் உள்ளனர். அவர்களை திரும்ப

புதுடில்லி:ஆப்கனில் உள்ள இந்திய துணை துாதரகத்தை தலிபான்கள்சூறையாடி, முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய துாதரகம் உள்ளது. இது தவிர, காந்த ஹார், ஹீரட் உள்ளிட்ட மாகாணங்களில் நான்கு துணை துாதரகங்களும் உள்ளன.


தலிபான்கள் வேவு

காபூலில் உள்ள இந்திய துாதரகத்தில் சில அதிகாரிகள் மட்டும் உள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து வர இந்தியா முயற்சி மேற்கொண்டு உள்ளது.இந்நிலையில் தலிபான்கள், காந்தஹாரில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் பூட்டை உடைத்து அலுவலகத்தை சூறையாடியுள்ளனர்.அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த துாதரக வாகனங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோல, ஹீரட், மசார் - ஐ - ஷெரீப்பில், பூட்டியுள்ள இந்திய துணை துாதரகங்களையும் தலிபான்கள் வேவு பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் 'நேட்டோ' படைகளுக்கு ஆதரவாக வேலை பார்த்தவர்களை தேடி, தலிபான்கள் வீடு வீடாகச் சென்று விசாரித்து வருவதாக, ஐ.நா., உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கன் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தில் பணியாற்றியோரையும் தலிபான்கள் குறி வைத்து தேடி வருவதாகக் கூறப்படுகிறது.


உலக நாடுகள் கவலை



அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்த தலிபான்கள், தற்போது பழிக்குப் பழி வாங்கும் செயலில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளுக்கு கவலை அளித்து உள்ளது.இந்நிலையில் தலிபானுக்கு, சிரியாவில் உள்ள அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு, சீனாவில் உள்ள துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி ஆகியவை பகிரங்கமாக பாராட்டு தெரிவித்துள்ளன.


துாக்கில் தொங்கவிட்ட தலிபான்கள்

ஆப்கனில் நேற்று துர்க்மினிஸ்தான் எல்லை அருகே உள்ள பத்கிஸ் மாகாணத்தை தலிபான் படை கைப்பற்றியது. இதையடுத்து, அங்குள்ள தலைமை போலீஸ் அதிகாரி ஹாஜி முல்லா அச்சக்சய் என்பவர் தலிபான்களிடம் சரண் அடைந்தார்.அவரது கைகளையும், கண்களையும் கட்டிய தலிபான் பயங்கரவாதிகள் அவரை பொது இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, துாக்கில் தொங்கவிட்டனர்.

பத்திரிகையாளர் உறவினர் கொலை

ஆப்கன் தலைநகர் காபூலில், தலிபான்கள் வீடு வீடாக சென்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த, டச்சு வெல் பத்திரிகையின் நிருபர் ஒருவரை தேடிச் சென்ற போது, அங்கிருந்த அவரது உறவினர்களை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவத்திற்கு, டச்சு வெல் பத்திரிகையின் தலைமை இயக்குனர், பீட்டர் லிம்போர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலிபான்கள் தேடி வந்த பத்திரிகையாளர், தற்போது ஜெர்மனியில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X