மலேஷியாவில் ஆட்சி அமைக்கும் முன்னாள் துணை பிரதமர்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோலாலம்பூர்:மலேஷியாவில், ''முன்னாள் துணை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று புதிய ஆட்சி அமைப்பார்,'' என, மன்னர் சுல்தான் அப்துல்லா அறிவித்துள்ளார்.ஆசிய நாடான மலேஷியாவில் முஹைதீன் யாசின், 18 மாதங்களே பிரதமர் பதவியில் இருந்தார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் ஆட்சி முடிவுக்கு வந்தது.இந்நிலையில் மன்னர் சுல்தான்

கோலாலம்பூர்:மலேஷியாவில், ''முன்னாள் துணை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று புதிய ஆட்சி அமைப்பார்,'' என, மன்னர் சுல்தான் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஆசிய நாடான மலேஷியாவில் முஹைதீன் யாசின், 18 மாதங்களே பிரதமர் பதவியில் இருந்தார். கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சமீபத்தில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் ஆட்சி முடிவுக்கு வந்தது.இந்நிலையில் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்தவரும், கடந்த ஆட்சியில் துணை பிரதமராக இருந்தவருமான இஸ்மாயில் சப்ரி யாகோப்பை, 61, ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, மன்னர் சுல்தான் அப்துல்லா கூறியுள்ளதாவது:இஸ்மாயில் அதிகபட்சமாக, 114 உறுப்பினர் களின் ஆதரவு பெற்றுள்ளார். அதனால், புதிய பிரதமராக இன்று அவர் பொறுப்பேற்பார்.இவரது நியமனம் நாட்டின் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என, நம்புகிறேன்.ஆட்சியில் இருப்போர், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு நாட்டில் கொரோனா பாதிப்பை சமாளிக்க ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X