தமிழ்நாடு

ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கோவை டவுன்பஸ்களில் 'டபுள்' கட்டணம்: வந்தார்கள்...நொந்தார்கள்!

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவையில் பெரும்பாலான தனியார் டவுன்பஸ்களில், வடமாநிலத் தொழிலாளர்களிடம் இரட்டிப்புக் கட்டணம் வாங்குவதாக, புகார்கள் எழுந்துள்ளன.அரசு டவுன்பஸ்களில் பெண்களுக்கு, இலவச பயணம் என்ற திட்டம், தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அந்த பஸ்களில் பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதனால் அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் டீலக்ஸ் டவுன் பஸ்களில், கூடுதல்
ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கோவை டவுன்பஸ்களில் 'டபுள்' கட்டணம்: வந்தார்கள்...நொந்தார்கள்!

கோவையில் பெரும்பாலான தனியார் டவுன்பஸ்களில், வடமாநிலத் தொழிலாளர்களிடம் இரட்டிப்புக் கட்டணம் வாங்குவதாக, புகார்கள் எழுந்துள்ளன.அரசு டவுன்பஸ்களில் பெண்களுக்கு, இலவச பயணம் என்ற திட்டம், தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அந்த பஸ்களில் பெண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.இதனால் அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் டீலக்ஸ் டவுன் பஸ்களில், கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆண்கள் உள்ளனர்.

இது, ஆண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையில் இயக்கப்படும், 600க்கும் அதிகமான அரசு டவுன்பஸ்களில், 200 டவுன்பஸ்கள், டீலக்ஸ் பஸ்களாக இயக்கப்படுகின்றன.இதனால் கோவையில் பஸ்களில் செல்லும் பெரும்பாலான ஆண்கள், தனியார் டவுன்பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர். இருப்பினும், பெண்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், முன்பிருந்ததை விடஇந்த தனியார் டவுன்பஸ்களின் வருவாய், வெகுவாகக் குறைந்துள்ளது.

இதைச் சரிக்கட்டுவதற்காக, பல்வேறு முறைகேடுகளிலும் அவர்கள் ஈடுபடுவதாக புகார் கிளம்பியுள்ளது. முக்கியமாக, வடமாநிலத் தொழிலாளர்களிடமும், படிக்காத பாமர மக்களிடமும் இரட்டிப்புக் கட்டணம் வாங்குவதாகத் தெரியவந்துள்ளது.அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு ஐந்து ரூபாய் டிக்கெட் என்றால், அதற்கு எட்டுரூபாயிலிருந்து 10 ரூபாய் வரையிலான, டிக்கெட்டைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர்.வடமாநிலத் தொழிலாளர்களில், தமிழ் பேசத் தெரிந்த யாராவது இருந்தால், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இல்லாவிடில், வேறு வழியின்றி அவர்கள் கொடுக்கும் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு, அமைதியாக இருந்து விடுகின்றனர்.யாராவது பிரச்னையைக் கிளப்பினால், உடனடியாக அவர்களுக்கு டிக்கெட்டை மாற்றித் தந்துள்ளனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில், தனியார் டவுன்பஸ்களில் வடமாநிலத் தொழிலாளர்களை ஏமாற்றி, இரட்டிப்புக் கட்டணம் வாங்குவது தொடர்கிறது.

கோவையில் ஏற்கனவே வடமாநிலத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் ஊதியம், இதர சலுகைகளில் நிறைய தொழிலாளர் நலச்சட்டங்கள், மீறப்படுவதாக புகார்கள் உள்ளன. அதற்காக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குறைந்தபட்சம், இரட்டிப்புக் கட்டணம் வாங்கும் பஸ்கள் மீதாவது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
21-ஆக-202108:37:01 IST Report Abuse
Muraleedharan.M கலைஞர் ஆட்சியில் இருந்தே திமுக என்றால் தில்லுமுல்லு ஆட்சிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X