பொது செய்தி

தமிழ்நாடு

'மீம்ஸ்' மூலம் போலீசார்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை,:மீம்ஸ் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், கோவை மாவட்ட போலீசாரின் நடவடிக்கைக்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை
 'மீம்ஸ்' மூலம் போலீசார்

கோவை,:மீம்ஸ் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், கோவை மாவட்ட போலீசாரின் நடவடிக்கைக்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வடிவேலு காமெடியை கொண்டு, கோவை மாவட்ட போலீசார் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது, பொதுமக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. போலீசார் கூறுகையில், 'கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள், தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரணமாக வழங்கப்படும் விழிப்புணர்வை விட, மீம்ஸ் மூலம் வழங்கப்படும் விழிப்புணர்வு, அனைவரிடத்திலும் விரைந்து சென்றடைகிறது. இதைக்கருத்தில் கொண்டு, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X