கடம்பத்துாரில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துாரில் விழிப்புணர்வு இல்லாமல், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து வருகின்றனர்.சென்னை -- அரக்கோணம் ரயில் நிலையம் இடையே, திருவள்ளூர் அடுத்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம்.இப்பகுதி தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பதால், பொதுமக்கள் ரயிலில் அடிபட்டு இறக்கும் நிலை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் ரயிலில் வந்த பயணியர் மற்றும்

கடம்பத்துார் : கடம்பத்துாரில் விழிப்புணர்வு இல்லாமல், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து வருகின்றனர்.

சென்னை -- அரக்கோணம் ரயில் நிலையம் இடையே, திருவள்ளூர் அடுத்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம்.இப்பகுதி தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடப்பதால், பொதுமக்கள் ரயிலில் அடிபட்டு இறக்கும் நிலை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் ரயிலில் வந்த பயணியர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில், தண்டவாளத்தை கடந்து வந்தனர்.

இதேபோல் இரு சக்கரவாகனங்களில் செல்வோரும், தண்டவாளத்தில் ரயில் வரும் போது ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார், 'ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கக் கூடாது' என அறிவுறுத்தியும், பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இவ்வாறு கடந்து வருகின்றனர்.இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகே நடைமேடை அமைக்கவும், மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் தான் இது முடிவுக்கு வரும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X