பல்லாங்குழியான மணவூர் தார்ச்சாலை| Dinamalar

பல்லாங்குழியான மணவூர் தார்ச்சாலை

Added : ஆக 21, 2021
Share
திருவாலங்காடு : மணவூர் -- சின்னம்மாபேட்டை தார்ச்சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கும் நிலையில், அதை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மணவூர் -- சின்னம்மாபேட்டை சாலையின் நீளம், 4 கி.மீ., கடந்த ஆண்டு சின்னம்மாபேட்டையில் இருந்து, தொழுதாவூர் வரை, 2 கி.மீ., தார்ச்சாலை அமைக்கப்பட்டது.மீதம் இருந்த, 2 கி.மீ., சாலை அமைக்காமல் கிடப்பில்

திருவாலங்காடு : மணவூர் -- சின்னம்மாபேட்டை தார்ச்சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கும் நிலையில், அதை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மணவூர் -- சின்னம்மாபேட்டை சாலையின் நீளம், 4 கி.மீ., கடந்த ஆண்டு சின்னம்மாபேட்டையில் இருந்து, தொழுதாவூர் வரை, 2 கி.மீ., தார்ச்சாலை அமைக்கப்பட்டது.மீதம் இருந்த, 2 கி.மீ., சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது:சின்னம்மாபேட்டை, வியாசபுரம், தொழுதாவூரில் இருந்து, திருவள்ளூருக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வோர் இந்த சேதமடைந்த சாலையால், மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

ஓராண்டில் மட்டும், சேதமடைந்த இந்த தார்ச் சாலையால், ஏழு விபத்துகள் நடந்துள்ளன. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பி.டி.ஓ., பெட்ரிக் அருண்குமார் கூறியதாவது:ஒன்றிய சாலையாக இருந்த சில சாலைகளை, நெடுஞ்சாலை துறை கடந்தாண்டு கையகப்படுத்தியது. அதில், மணவூர் -- சின்னம்மாபேட்டை சாலையும் ஒன்று.அந்த பகுதியில் தார்ச் சாலை அமைக்கும் பணி, நெடுஞ்சாலை துறை வசம் உள்ளது. விரைவில் பணி துவங்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X