சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விலங்குகளை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமரா மாயம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:நரசீபுரம் வனப்பகுதியில், வனவிலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இவ்வனப்பகுதிகளில், வனத்துறை சார்பில், விலங்குகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க, கேமராக்கள்

தொண்டாமுத்தூர்:நரசீபுரம் வனப்பகுதியில், வனவிலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமரா மாயமானது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இவ்வனப்பகுதிகளில், வனத்துறை சார்பில், விலங்குகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில், வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த, வனவிலங்குகளை கண்காணிக்கும் கேமரா, கடந்த, 18ம் தேதி மாயமானது.வனக்காப்பாளர் சரவணகுமார், போலீசில் புகார் அளித்தார். ஆலாந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X