பொது செய்தி

தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு தேறியவரா? தொழில் தொடங்கலாம் வாங்க!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், தொழில் தொடங்க விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. 2021-22ம் நிதியாண்டில், கோவை மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கொரோனா காரணமாக, இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான நேர்முகத்தேர்வில் இருந்தும், தொழில் முனைவோர்

கோவை:சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், தொழில் தொடங்க விரும்புவோர், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. 2021-22ம் நிதியாண்டில், கோவை மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கொரோனா காரணமாக, இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான நேர்முகத்தேர்வில் இருந்தும், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் இருந்தும், செப்.,30 வரை, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு குறையாமல் வசிக்க வேண்டும். வருமான உச்சவரம்பு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.உற்பத்தி தொழில்களை, 15 லட்சம் ரூபாய் முதலீட்டிலும், சேவை, வியாபார தொழில்களை, அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் முதலீட்டிலும் தொடங்க, www.msmetamilnadu.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு, 25 சதவீதம் மானியம் வழங்குகிறது. மேலும் விபரங்களுக்கு, 89255 33932 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X