பொது செய்தி

தமிழ்நாடு

சானிட்டைசர் விற்பனை; அறுபது சதவீதம் வீழ்ச்சி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், சானிட்டைசர் விற்பனை, 60 சதவீதம் குறைந்துள்ளதாக, மருந்து விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம் துவக்கம் முதலே, தினசரி கொரோனா பாதிப்பின் தாக்கம், இறங்குமுகமாக உள்ளது. இந்நிலையில், சானிட்டைசர் மற்றும் முக கவச விற்பனை குறைந்துள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் கருப்பையா

கோவை:கோவை மாவட்டத்தில், சானிட்டைசர் விற்பனை, 60 சதவீதம் குறைந்துள்ளதாக, மருந்து விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம் துவக்கம் முதலே, தினசரி கொரோனா பாதிப்பின் தாக்கம், இறங்குமுகமாக உள்ளது. இந்நிலையில், சானிட்டைசர் மற்றும் முக கவச விற்பனை குறைந்துள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், ''தற்போதைய சூழலில், பொதுமக்களிடம் சானிட்டைசர் பயன்படுத்தும் பழக்கம் குறைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் சிறிய அளவிலான, சானிட்டைசர் பாட்டில்களை கூட கையில் வைத்திருப்பதில்லை.இதனால், சானிட்டைசர் விற்பனை, 60 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல், துணியிலான முக கவசங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக கவசம் விற்பனையும், 30 சதவீதம் குறைந்துள்ளது. பள்ளி,கல்லுாரிகள் திறக்கப்படும்போது, விற்பனை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X