பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
முனீஸ்வரர் கோவில் விழாதிருத்தணி: திருத்தணி அடுத்த குன்னத்துார் கிராம முனீஸ்வரர் கோவிலின், ஆறாம் ஆண்டு விழா, நேற்று விமரிசையாக நடந்தது.இதையொட்டி காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.மூலவர் முனீஸ்வரர், விநாயகர், ஆதிமுனீஸ்வரர், கருமாரியம்மன் ஆகிய சன்னிதிகளில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிரபைகள் பிரதஷ்டை செய்து, கலசநீர் ஊற்றி

முனீஸ்வரர் கோவில் விழா

திருத்தணி: திருத்தணி அடுத்த குன்னத்துார் கிராம முனீஸ்வரர் கோவிலின், ஆறாம் ஆண்டு விழா, நேற்று விமரிசையாக நடந்தது.இதையொட்டி காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.மூலவர் முனீஸ்வரர், விநாயகர், ஆதிமுனீஸ்வரர், கருமாரியம்மன் ஆகிய சன்னிதிகளில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிரபைகள் பிரதஷ்டை செய்து, கலசநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு வண்ணமலர் அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனர்.

எல்லையம்மனுக்கு கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது.இதன் கும்பாபிஷேகம், நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. நான்காம் கால யாகபூஜையும், காலை, 8:00 மணிக்கு கலச ஊர்வலம் முடிந்து, கோபுரத்தின் மீது கலச நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

காந்தகிரியில் பிரதோஷம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திரவிலாசபுரம் அருகே அமைந்துள்ளது காந்தகிரி மலை. மலை மீது அகத்தீஸ்வரர் கோவிலும், மலையடிவாரத்தில் அனுமன் கோவிலும் அமைந்துள்ளன.மலைக்கோவிலில் நேற்று மாலை பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:30 மணிக்கு, நந்தியம்பெருமானுக்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, சுவாமிக்கு அருகம்புல் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின் பிரதோஷ நாதர், மலைக்கோவிலில் உள்பறப்பாடு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வீடுகளில் வரலட்சுமி நோன்பு

திருத்தணி: கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் வழிபட தடை உள்ளது.இதனால் வரலட்சுமி நோன்பு நாளான நேற்று, திருத்தணி நகரில் உள்ள அம்மன் கோவில்களில், பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.கோவில்கள் மூடப்பட்டதால், திருத்தணியில் பெரும்பாலான பெண்கள், தங்களது வீடுகளில் வரலட்சுமி நோன்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

போலீஸ் கண்காணிப்பு மையம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுலா பகுதி. இங்கு பயணியரிடம் வழிப்பறி, இருசக்கர வாகன திருட்டு என அதிகரிக்கிறது.பயணியர் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு மையங்கள் அமைக்க, காவல் துறை முடிவெடுத்து, செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி., விஜயகுமார், கலெக்டர் ராகுல்நாத்திடம் பரிந்துரைத்தார். இந்நிலையில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பஸ் நிலையம், சாலவான்குப்பம் புலிக்குகை ஆகிய பகுதிகளில், இம்மையம் அமைப்பது குறித்து, தாசில்தார் சிவசங்கரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுடன் தற்போது ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.

நுாக்கலம்மன் கோவிலில் விமரிசை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் - எல்.எண்டத்துார் சாலையில், பழமையான நுாக்கலம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் நுாக்கலம்மனுக்கும், கங்கையம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு உற்சவர் அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவில் வளாகத்தில், ஊரணிப்பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X