சிவலிங்கம் கடத்தலா : அதிகாரி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவலிங்கம் கடத்தலா : அதிகாரி ஆய்வு

Added : ஆக 21, 2021
Share
திருவாலங்காடு, : தொழுதாவூர் சிவன் கோவிலின் பழைய சிவலிங்கம் கடத்தப்பட்டதா என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி, கோவிலில் ஆய்வு நடத்தினார்.திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில் ஆதிகும்பேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பழைய சிவலிங்கம் கடத்தப்பட்டு, புதிய சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ளதாக, காஞ்சிபுரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு புகார்

திருவாலங்காடு, : தொழுதாவூர் சிவன் கோவிலின் பழைய சிவலிங்கம் கடத்தப்பட்டதா என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி, கோவிலில் ஆய்வு நடத்தினார்.

திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சியில் ஆதிகும்பேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பழைய சிவலிங்கம் கடத்தப்பட்டு, புதிய சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ளதாக, காஞ்சிபுரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு புகார் வந்தது.இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் குமார், தொழுதாவூர் கோவிலில் நேற்று ஆய்வு செய்தார்.பின் ஊர் பெரியவர்கள், பழைய பூசாரிகளிடம் விசாரித்தபோது, தற்போதுள்ளது பழைய சிவலிங்கமே என்பது உறுதியானது. இதையடுத்து அவர் கிளம்பி சென்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X