போதை மாத்திரை விற்ற நபர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை மாத்திரை விற்ற நபர் கைது

Added : ஆக 21, 2021
Share
கோவை:கோவையில் போதை மாத்திரை விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர். கோவை, தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில், போதை மாத்திரை விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரிடம், போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம்

கோவை:கோவையில் போதை மாத்திரை விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர். கோவை, தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில், போதை மாத்திரை விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரிடம், போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார், அந்நபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் லாலி ரோடு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், 22. குளக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரிடம் இருந்த, 60 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X