சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் வாங்கி தருவதாக 'கமிஷன்' மோசடி! கதர் கட்சி நிர்வாகியால் பாதிக்கப்பட்டோர் கதறல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை;கோவையில் ஆவணங்களின் அடிப்படையில் கடன் வாங்கி தருவதாக, லட்சக்கணக்கில் 'கமிஷன்' பெற்று, அரசியல் கட்சி பிரமுகர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் தனியார் மருத்துவமனை இயக்குனரிடம், ஆவணங்களின் அடிப்படையில் கடன் வாங்கி தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் கமிஷன் பெற்று மோசடி செய்த புதுக்கோட்டையை சேர்ந்த, ஊராட்சி தலைவர் மற்றும் அவரது நண்பரை குற்றப்பிரிவு

கோவை;கோவையில் ஆவணங்களின் அடிப்படையில் கடன் வாங்கி தருவதாக, லட்சக்கணக்கில் 'கமிஷன்' பெற்று, அரசியல் கட்சி பிரமுகர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் தனியார் மருத்துவமனை இயக்குனரிடம், ஆவணங்களின் அடிப்படையில் கடன் வாங்கி தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் கமிஷன் பெற்று மோசடி செய்த புதுக்கோட்டையை சேர்ந்த, ஊராட்சி தலைவர் மற்றும் அவரது நண்பரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும், தற்போது பலரும் அதேபோன்று மோசடி புகார்களை அளித்து வருகின்றனர். இதனால் இருவர் மீதும், குண்டாஸ் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசியல்வாதி மோசடிஇச்சூழலில், ஆவணங்களின் அடிப்படையில், கோடி கணக்கில் கடன் பெற்றுத்தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் கமிஷன் தொகையை பெறும், அரசியல் கட்சி பிரமுகர்கள், மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகவே, இவர்கள் பிரத்யேக அலுவலகங்கள் அமைத்து, ஆட்களை உடன் வைத்து கொண்டு, தங்களுக்கு அரசியல், அரசு அதிகாரிகளின் நட்பு இருப்பது போல் காட்டி கொள்கின்றனர்.இதனை நம்பி, இவர்களால் தங்களுக்கு கடன் கிடைக்கும் என்று பலரும், கமிஷன் கொடுத்து ஏமாந்து வருகின்றனர்.கதற வைக்கும் கதர் கட்சிக்காரர்!குறிப்பாக, கோவை 'கதர்' கட்சியில், மாநில அளவிலான பொறுப்பில் உள்ள ஒருவர், இதுபோன்று பலரிடம் லட்சக்கணக்கில் கமிஷன் பெற்று, மோசடி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இவரிடம் ஏமாந்தவர்கள், போலீசிடம் செல்லாமல் இருக்க, தனது 'செக்'கை கொடுத்து காலம் தாழ்த்தி வருவதாக, பலரும் புகார் அளிக்க துவங்கியுள்ளனர். குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சி நிர்வாகியை, இதற்கு முன் ஏற்கனவே டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி செய்வதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, கர்நாடக மாநில போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவையிலும், அதேபோன்று தொடர்ந்து மோசடி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.யாராக இருந்தாலும் புகார் தெரிவிக்கலாம்!இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், 'அரசியல் கட்சி நிர்வாகிகள் உட்பட யாராக இருந்தாலும், மோசடியில் ஈடுபட்டது குறித்து, தகுந்த ஆவணங்களுடன் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடன் வாங்கி தருவதாக, கமிஷன் பெற்று மோசடிகள் நடப்பதாக புகார்கள் அதிகளவு வருவதால், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X