சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை; குடும்பத்தினர் மறியல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை விவசாயி தற்கொலைக்கு காரணமானோரை கைது செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.வெங்கல் அடுத்த மேல்கொண்டையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 47; விவசாயி. இவரது சகோதரர் பக்தவத்சலம், 44.இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த வாரம் இது தொடர்பாக எழுந்த பிரச்னையில், பக்தவத்சலத்தின் மனைவி தரணி, 42, பாபுவை அடித்ததாக

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை விவசாயி தற்கொலைக்கு காரணமானோரை கைது செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

வெங்கல் அடுத்த மேல்கொண்டையார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 47; விவசாயி. இவரது சகோதரர் பக்தவத்சலம், 44.இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த வாரம் இது தொடர்பாக எழுந்த பிரச்னையில், பக்தவத்சலத்தின் மனைவி தரணி, 42, பாபுவை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாபு மன வேதனையில் இருந்து உள்ளார். அவமானம் தாங்காமல், நேற்று முன்தினம், வீட்டில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.பாபுவின் தற்கொலைக்கு காரணமானோரை கைது செய்யக் கோரி, அவரது குடும்பத்தினர், வெங்கல் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.வெங்கல் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

பக்தவத்சலம், அவரது மகன் அஜித், 29, ஆகியோரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள தரணி, மற்றொரு மகன் சத்யா ஆகியோரை விரைவில் கைது செய்வோம் என கூறினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X