ராகுலின் பேஸ்புக் பதிவுகள் நீக்கம்| Dinamalar

ராகுலின் 'பேஸ்புக்' பதிவுகள் நீக்கம்

Added : ஆக 21, 2021
Share
புதுடில்லி:'டுவிட்டர்' வலை தளத்தை தொடர்ந்து, காங்., - எம்.பி., ராகுலின், 'பேஸ்புக்' பக்கத்திலும், பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புகைப்பட பதிவுகள் நேற்று நீக்கப்பட்டன.சமீபத்தில், டில்லியை சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பின், அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல்

புதுடில்லி:'டுவிட்டர்' வலை தளத்தை தொடர்ந்து, காங்., - எம்.பி., ராகுலின், 'பேஸ்புக்' பக்கத்திலும், பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புகைப்பட பதிவுகள் நேற்று நீக்கப்பட்டன.

சமீபத்தில், டில்லியை சேர்ந்த ஒன்பது வயது தலித் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பின், அந்த சிறுமியின் பெற்றோரை, காங்., - எம்.பி., ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு தொடர்பான, படங்களை, 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ராகுல் பகிர்ந்தார். அவற்றில், சிறுமியின் பெற்றோர் முகம் மறைக்கப்படவில்லை.

'போக்சோ' சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளத்தை பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். இதையடுத்து, ராகுல் பகிர்ந்த அந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. அதோடு, அந்த பதிவுகளை பகிர்ந்த ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

எனினும், அந்த கணக்குகள் பின்னர் விடுவிக்கப்பட்டன.பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் மட்டும் அந்த பதிவுகள் நீக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து, அந்த பதிவுகளை நீக்கி நடவடிக்கை எடுக்கக்கோரி, பேஸ்புக் நிறுவனத்திற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், ராகுலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அந்த சிறுமியின் பெற்றோர் புகைப்படங்கள் நீக்கப்பட்டன. இது குறித்து, ராகுல் மற்றும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X