அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் பிறந்த நாள் விழா: காங்., கொண்டாட்டம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
போத்தனூர்:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின், 77வது பிறந்த நாள், நேற்று காங்., கட்சியினரால் கொண்டாடப்பட்டது.குறிச்சி சர்க்கிள் காங்., சார்பில், போத்தனூர், நியூ டவுன் பகுதியில், தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில், ராஜிவ் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மாவட்ட துணை தலைவர் மதுசூதனன், பொது செயலாளர் மணி உள்பட பலர்

போத்தனூர்:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின், 77வது பிறந்த நாள், நேற்று காங்., கட்சியினரால் கொண்டாடப்பட்டது.குறிச்சி சர்க்கிள் காங்., சார்பில், போத்தனூர், நியூ டவுன் பகுதியில், தலைவர் முகமது இஸ்மாயில் தலைமையில், ராஜிவ் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மாவட்ட துணை தலைவர் மதுசூதனன், பொது செயலாளர் மணி உள்பட பலர் பங்கேற்றனர். கோண வாய்க்கால்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியிலும் நிகழ்ச்சி நடந்தது.செட்டிபாளையத்தில் பேரூராட்சி அலுவலகம் எதிரே, மதுக்கரை கிழக்கு வட்டார தலைவர் பழனிசாமி தலைமையில் விழா நடந்தது. வட்டார துணை தலைவர்கள் நடராஜ், வெள்ளிங்கிரி, நகர தலைவர் சிவபிரகாசம் உள்பட பலர் பங்கேற்றனர்.ரத்த தான முகாம்ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட காங்., சார்பில், கோவை அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த, 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X