மேற்கு வங்க வன்முறை டி.ஜி.பி.,க்கு சி.பி.ஐ., கடிதம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் நடந்த கொலை கொலை முயற்சி பலாத்காரம் ஆகிய சம்பவங்களின் விபரங்களைக் கேட்டு மாநில டி.ஜி.பி. க்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது. கொலை முயற்சிஇங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி முடிவுகள்

புதுடில்லி:மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் நடந்த கொலை கொலை முயற்சி பலாத்காரம் ஆகிய சம்பவங்களின் விபரங்களைக் கேட்டு மாநில டி.ஜி.பி. க்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது. கொலை முயற்சிஇங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி முடிவுகள் வெளியாயின. இதில் திரிணமுல் காங். அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.தேர்தல் முடிவுகள் வெளியான பின் மாநிலத்தில் பயங்கர வன்முறை அரங்கேறியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.

திரிணமுல் காங். தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் பா.ஜ. தொண்டர்கள் ஆறு பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.மேலும் பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை குறித்து விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம் 'வன்முறையில் நடந்த கொலை கொலை முயற்சி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகிய சம்பவங்களை மட்டும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது.


விசாரணை

வன்முறையில் நடந்த மற்ற சம்பவங்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும் உத்தர விட்டது.இந்நிலையில் மேற்கு வங்க வன்முறையை விசாரிக்க நான்கு குழுக்களை சி.பி.ஐ. அமைத்துள்ளது. சி.பி.ஐ. இணை இயக்குனர்கள் ரமனீஷ் அனுராக் வினீத் விநாயகர் சம்பத் மீனா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நான்கு குழுக்களிலும் தலா ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.பல்வேறு மாநிலங்களின் துணை டி.ஜி.பி. க்கள் எஸ்.பி. க்கள் இந்த குழுக்களில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுக்களின் விசாரணையை சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் அஜய் பட்நாகர் கண்காணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறையில் அரங்கேறிய கொலை கொலை முயற்சி பலாத்கார சம்பவங்கள் பற்றிய விபரங்களை கேட்டு மேற்கு வங்க டி.ஜி.பி. க்கு சி.பி.ஐ. கடிதம் எழுதிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X