பொது செய்தி

தமிழ்நாடு

வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்குவரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இங்குள்ள சிவபெருமான், சுயம்பு லிங்கமாக

உத்திரமேரூர் : திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்குவரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இங்குள்ள சிவபெருமான், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தட்சணாமூர்த்தி, ராஜயோக சிம்ம தட்சணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.அனைத்து ராசியினருக்கும் திருமணம், பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு, காஞ்சிபுரம் மட்டுமின்றி பிற மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால், வெளியூர் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து திருப்புலிவனத்தைச் சேர்ந்த ஆசிரியர் அறிவழகன் கூறியதாவது:வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை நாட்களிலும், வியாழக்கிழமையில் சிம்ம தட்சணாமூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்திலும் பங்கேற்க, வெளியூர் வாசிகள் அதிகளவில் வருகின்றனர்.

ஆனால், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட வசதிகள் கோவில் வளாகத்தில் இல்லை.திருப்புலிவனம் ஊராட்சியிலும் பொது கழிப்பறை வசதி இல்லை. இதனால், கோவில் பின்புறத்தை இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்துகின்றனர்.எனவே, பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில், கட்டண கழிப்பறை, குளியல் அறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X