பொது செய்தி

தமிழ்நாடு

செங்குளத்துக்குள் சொட்டு நீர் அமைத்து விவசாயம்!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:குனியமுத்துார் செங்குளத்துக்குள் விவசாயம் செய்வதற்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் நொய்யல் ஆறு நீர் வழித்தடத்தில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணி, ரூ.230 கோடியில் நடந்து வருகிறது. இதில், சின்ன குளத்தில் இருந்து செம்மண் எடுத்து, கரையை பலப்படுத்தி, கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, செங்குளத்தின் கரையை

கோவை:குனியமுத்துார் செங்குளத்துக்குள் விவசாயம் செய்வதற்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் நொய்யல் ஆறு நீர் வழித்தடத்தில் உள்ள குளங்களை சீரமைக்கும் பணி, ரூ.230 கோடியில் நடந்து வருகிறது. இதில், சின்ன குளத்தில் இருந்து செம்மண் எடுத்து, கரையை பலப்படுத்தி, கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, செங்குளத்தின் கரையை பலப்படுத்தவும், மிகைபோக்கி புதுப்பித்துக் கட்டவும், பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.செங்குளத்துக்குள் கட்டட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. கழிவு நீர் குளத்துக்குள் நேரடியாக கலக்கிறது. குனியமுத்துார், பாலக்காடு மெயின் ரோடு செல்வதற்கான பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது.இதுதவிர, குளக் கரையை ஒட்டிய பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுகிறது; சொட்டு நீர் பாசனமும் செய்யப்பட்டு உள்ளது. அதனால், குளத்தின் எல்லையை அளவீடு செய்து, கரையை பலப்படுத்தி, கற்கள் பதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு கோட்ட பொறியாளர் திருமூர்த்தியிடம் கேட்ட போது, ''குளத்தின் எல்லை மறு அளவீடு செய்ய, நில அளவைத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மறுஅளவீடு செய்து, எல்லை நிர்ணயித்து, கரை பலப்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X