பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வரும் முன் சேதமான யாத்ரீகர் 'பார்க்கிங்'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : கோவில் நிறைந்த நகரம் என்பதால் காஞ்சிபுரத்திற்கு, பல மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர்.அவர்களின் வாகனங்கள், அந்தந்த கோவில் பகுதியில் நிறுத்தப்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக, சுற்றுலாத் துறை சார்பில், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன், வாகன

காஞ்சிபுரம் : கோவில் நிறைந்த நகரம் என்பதால் காஞ்சிபுரத்திற்கு, பல மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர்.

அவர்களின் வாகனங்கள், அந்தந்த கோவில் பகுதியில் நிறுத்தப்படும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக, சுற்றுலாத் துறை சார்பில், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன், வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்கவும்,அவர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையிலும், இந்த 'பார்க்கிங் பிளேஸ்' திட்டம் கொண்டு வரப்பட்டது.

வாகன நிறுத்தம் பணி முழுமையாக முடிந்து விட்டது. ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.மேலும், யாத்ரீகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்லும் வழியின் குறுக்கே மழை நீர் கால்வாய் செல்கிறது. அதன் மேல் சிமென்ட் கற்கள் பதித்து மூடியிருந்தனர். அந்த கால்வாய் உள்ள இடம் தற்போது உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், உள்ளே வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் ஒரு பகுதி பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், தாங்கள் வரும் வாகனங்களை அந்தந்த பகுதிகளில் நிறுத்தி செல்கின்றனர். எனவே, யாத்ரீகர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை, சம்பந்தப்பட்ட துறையினர் உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X