பொது செய்தி

தமிழ்நாடு

இந்த உலகமே இருட்டுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்! நெகிழ்ச்சியில் உருகுகிறார்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
''இந்த உலகமே இருட்டாதான் இருக்குன்னு, ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். எப்போதும் என்னை மகிழ்ச்சியா, உணர வைக்கறது இசைதான்,'' என, நெகிழ்ச்சியாக மழலை மொழியில் கொஞ்சும் நிரஞ்சனா, பல அசாத்திய திறமைகளுக்கு சொந்தக்காரர்.ராமலிங்கம் காலனி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிரஞ்சனா. பிறவியிலே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், சுதந்திர
 இந்த உலகமே இருட்டுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்! நெகிழ்ச்சியில் உருகுகிறார்

''இந்த உலகமே இருட்டாதான் இருக்குன்னு, ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். எப்போதும் என்னை மகிழ்ச்சியா, உணர வைக்கறது இசைதான்,'' என, நெகிழ்ச்சியாக மழலை மொழியில் கொஞ்சும் நிரஞ்சனா, பல அசாத்திய திறமைகளுக்கு சொந்தக்காரர்.ராமலிங்கம் காலனி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிரஞ்சனா. பிறவியிலே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், சுதந்திர தின விழாவிற்கு, தேசிய கீதத்தை இசையமைத்து, வெளியிட்ட வீடியோ, பலரின் கவனத்தை பெற்றது.இவரை நேரில் சந்தித்தோம்...''ரொம்ப நாளா இந்த உலகமே, இருட்டுக்குள்ள தான் இருக்குனு, நினைச்சிட்டு இருந்தேன். பின்னாடி தான் எனக்கு மட்டும்தான், இந்த உலகம் கருப்பா இருக்குதுனு தெரியும். ஆனா, இந்த சூழல்ல இருந்து என்ன மீட்டெடுக்கனும்னு, என் அப்பா அய்யாசாமியும், அம்மா நந்தினியும் ரொம்ப சிரமப்பட்டாங்க. அஞ்சு வயசுல இருந்து கீ போர்டு வாசிக்கிறேன். சமீபமா, சார்ஸ் இசைக்கருவியும், வாசிக்க கத்துக்கிட்டேன். எனக்கு இசை ஆசிரியரா ஆகணும்னு தான் விருப்பம். ஆனால், நான் படிப்புலயும் சுட்டி.எங்க டீச்சர் எவ்வளவு பெரிய நம்பர் சொன்னாலும், ஈஸியா விடை சொல்லிடுவேன். ஏன் தெரியுமா...அபாகஸ் கிளாசும் போறேன்,''- மழலை மொழியில் கொஞ்சிய நிரஞ்சனா, சார்ஸ் இசைக்கருவியில், 'எந்தன் வாழ்விலும் அர்த்தமுண்டு' என, வாசித்து முடித்த போது, பலரும் ஆச்ச்சரியத்தில் புருவங்களை உயர்த்தினர்.கொத்தாக மெடல்களை கையில் பிடித்திருந்த இவர், பாட்டு, பேச்சு, மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல் என, பல போட்டிகளில் வெற்றி பெற்று, கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.நிரஞ்சனாவின் அக்கா அர்ச்சனாவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை. இருவரையும் பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்பறையிலே முழுமையாக இருந்து, மகள்களுக்காக தாமும் சேர்ந்து படிக்கிறார் நந்தினி. அரசிடம் ஏதாவது உதவி தேவையா என இவரிடம் கேட்டபோது, ''உதவி எதுவும் வேண்டாம். ஆனால், என் ஆயுளுக்கு பிறகு, என் மகள்களை தனித்து விடக் கூடாது,'' என கூறி கண் கலங்கினார்.தலைமையாசிரியை மாலா, ''நிரஞ்சனா, அர்ச்சனா போல, 15 மாற்றுத்திறன் குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். இவர்களுக்கு, ஏதாவது ஒரு திறமை கூடுதலாக இருப்பதால், அதை கண்டறிந்து வெளிப்படுத்த, அடித்தளம் அமைத்து தருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X