பொது செய்தி

தமிழ்நாடு

பாத வெடிப்பை போக்க...

Added : ஆக 21, 2021
Share
Advertisement
முகத்தை போலவே, உங்களை ஏந்தும் பாதங்களையும், பராமரிப்பது முக்கியம். சரியாக பாதங்களை பராமரிக்காத போது, வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது வலி மிக்கதுடன், ஆரோக்கியத்திற்கும் கேடாக அமைகிறது.பாதவெடிப்பு பிரச்னைக்கு சிறந்த தீர்வை, 'பியூமிஸ்' கல் அளிக்கிறது. எரிமலை மற்றும் நீர் கலக்கும் போது, பியூமிஸ் கல் உருவாகிறது. இது, உலர்ந்த மற்றும் இறந்த செல்களை நீக்க
 பாத வெடிப்பை போக்க...

முகத்தை போலவே, உங்களை ஏந்தும் பாதங்களையும், பராமரிப்பது முக்கியம். சரியாக பாதங்களை பராமரிக்காத போது, வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது வலி மிக்கதுடன், ஆரோக்கியத்திற்கும் கேடாக அமைகிறது.பாதவெடிப்பு பிரச்னைக்கு சிறந்த தீர்வை, 'பியூமிஸ்' கல் அளிக்கிறது. எரிமலை மற்றும் நீர் கலக்கும் போது, பியூமிஸ் கல் உருவாகிறது. இது, உலர்ந்த மற்றும் இறந்த செல்களை நீக்க பயன்படும் சிராய்ப்பு கல்லாகும்.நீங்கள் தினமும் இந்த கல்லை பயன்படுத்தும் போது, வறண்ட சருமம் சரிசெய்யப்பட்டு, மென்மையான கால்களை பெறலாம். ஆனால், சரியாக பயன்படுத்தாவிடில், உங்கள் பாதம் சேதாரத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.பயன்படுத்துவது எப்படி?n அகலமான பாத்திரத்தில், வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து, அதில் கால்களை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.n பியூமிஸ் கல்லையும் நீரில் ஊற வைக்கவும். இதன்மூலம், வறண்ட கல்லால், உங்கள் தோலில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.n கால்களை வெளியே எடுத்து, ஈரமான பியூமிஸ் கல்லால், வெடிப்பு உள்ள பகுதிகளில், 3 நிமிடங்கள் வரை, வட்டமாக மசாஜ் செய்வது போல தேய்க்கவும்.n பின்னர், குளிர்ந்த நீரில் கால்களை கழுவி, காட்டன் துணியால் துடைத்து எடுத்து, மாய்ச்சரைசர் கிரீம் அல்லது எண்ணெய் தேய்க்கவும்.n ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பிறகும், பியூமிஸ் கல்லை நன்கு சுத்தம் செய்து, இயற்கையான காற்றில் உலரும்படி தொங்க விடவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X