பொது செய்தி

தமிழ்நாடு

தன்னம்பிக்கை அளிக்கும் 'எழுதுக' இயக்கம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆளுமைகள் ஒருங்கிணைந்து, 'எழுதுக' புத்தகம் எழுதும் இயக்கத்தை துவக்கியுள்ளனர்.தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் என பல்வேறு தலைப்புகளில், இந்த இயக்கம் உதவியுடன் புத்தகங்களை எழுதியுள்ளனர். இதில், 18 பேர்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆளுமைகள் ஒருங்கிணைந்து, 'எழுதுக' புத்தகம் எழுதும் இயக்கத்தை துவக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் என பல்வேறு தலைப்புகளில், இந்த இயக்கம் உதவியுடன் புத்தகங்களை எழுதியுள்ளனர். இதில், 18 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர், புத்தக எழுதியது குறித்து இவ்வாறு கூறியுள்ளனர்.

தி.ஜனப்ரியா,பிளஸ் 1,பி.எம்.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம்வகுப்பு ஆசிரியை மூலம் 'எழுதுக' இயக்கம் குறித்து அறிந்து, புத்தகம் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 'அறிவியல் கதைகள்' என்ற தலைப்பில், கதை புத்தகம் எழுதி உள்ளேன். மாணவர்கள் தாங்கள் படிக்கும்போது புரியாத பாடத்தை மனப்பாடம் செய்கிறார்கள். அப்படி இல்லாமல் கதை வடிவில் உருவாக்கி படித்தால் நிச்சயம் அவர்களுக்கு புரியும். அவ்வாறே நான் 'அறிவியல்' கருத்துக்களை எழுதியுள்ளேன்.___ மோ.அனுப்பிரியாபொறியியல் கல்லுாரி இறுதியாண்டு, காஞ்சிபுரம்

அம்மா ஆசிரியர் என்பதால், புத்தக வாசிப்பு, புத்தகம் எழுத துாண்டியது. 'தன்னம்பிக்கை மகளிர்' என்ற கட்டுரை நுாலை எழுதியுள்ளேன்.இதில் தன்னம்பிக்கையோடு செயல்படக்கூடிய 10 பெண்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். இவர்கள் தம் வாழ்வில் சந்தித்த இடர்ப்பாடுகளையெல்லாம் மனஉறுதியோடு எதிர்கொண்டு கடந்து வந்ததை குறிப்பிட்டுள்ளேன். இந்த சமூகத்திற்கு அவர்களது உழைப்பு, சிறந்து முன்னுதாரணமாக இருக்கும்.___சு.வருண்குமார்பிளஸ் 2எஸ்.எஸ்.கே.வி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காஞ்சிபுரம்சிறு வயதில் இருந்தே சாண்டில்யன், கல்கி எழுதிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் என் ஆர்வத்தையும் வெளிக்கொணரும் வகையில் 'எழுதுக' அமைப்பு எனக்கு வாய்ப்பு வழங்கி, துாண்டுகோலாய் இருந்தது. 'அட்சய பாத்திரம்' என்ற குறுநாவல் புத்தகம் எழுதியுள்ளேன்.-------------------

செ.ஜீவிதாஎம்.எஸ்சி., கணிதம்,முதுகலை இறுதியாண்டுபச்சையப்பன் மகளிர் கல்லுாரி, காஞ்சிபுரம்என் ஆசிரியர், 'எழுதுக' இயக்கம் உதவியுடன் 'என் சிந்தனையில் பூத்த மலர்கள்' என்ற கட்டுரை வடிவில் புத்தகம் எழுதியுள்ளேன். அன்றாட வாழ்வின் தேவையையும், நம் வீட்டுப் பெண்களும் சாதிக்க வேண்டும்; எண்ணத்தின் மேன்மை பற்றி, அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான முறையில் எழுதியுள்ளேன்.-------------------------

மூ.யுகாசினி,9ம் வகுப்பு,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை.வகுப்பு ஆசிரியை, புத்தகம் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். எனக்குள் இருந்த கவிதை மீதான ஆர்வம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புத்தகமாக வெளிவந்துள்ளது. நான் எழுதியபுத்தகத்தின் பெயர் 'பூஞ்சோலை' வாழ்க்கையில் தேவைப்படுவது, குடும்பத்தின் அவசியம் பற்றி எழுதியுள்ளேன்.---

உ.தீபக் குமார்,8ம் வகுப்பு,சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,காஞ்சிபுரம்எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் கிள்ளிவளவன் என்பவர், 'வாட்ஸ் ஆப்'பில் 'எழுதுக' இயக்கத்தில் என் பெயரை பதிவு செய்தார். நான் எழுதிய கவிதை புத்தகத்தின் பெயர் 'வாழ்வை நேசிப்போம்' வாழ்வியல் சிந்தனைகள் குறித்த கவிதைகளை எழுதியுள்ளேன்.---

சு.வித்யா லட்சுமி,பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு,காஞ்சிபுரம்என் அம்மாவின் தோழி கொடுத்த உற்சாகத்தில், 'எண்ணுதல் யார்க்கும் எளிய!' என்ற சிந்தனைகளை பற்றி புத்தகம் எழுதியுள்ளேன். சிந்திப்பதும் அதை நடைமுறைப்படுத்துவதும் எளிதே. நாம் தினமும் எதிர்கொள்ளும் பொதுவான விஷயங்களைப் பற்றிய வெவ்வேறு கருத்துகளை, பல தலைப்புகளில் கட்டுரைகளாக எழுதியுள்ளேன். நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் என நம்புகிறேன்.----------

சே.பரமேஸ்வரி,பி.ஏ., பொருளாதாரம்இரண்டாமாண்டு,பச்சையப்பன் மகளிர் கல்லுாரி, காஞ்சிபுரம்என் பள்ளி ஆசிரியை அறிவிப்பால், புத்தகம் எழுதினேன். நுாலின் பெயர் எதார்த்தம். யதார்த்தமான முறையில் பல கருத்துகளை கொண்டுள்ளதால், மதுரை மொழி நடையில், பாமரனுக்கு எளிதாக புரியும் வகையில் எழுதியுள்ளேன்.---------

ஆர்.காயத்ரி,சித்த மருத்துவம் இரண்டாமாண்டு, காஞ்சிபுரம்நண்பர்கள், பள்ளி ஆசிரியையும், 'எழுதுக' இயக்கத்தில் என் பெயரை சேர்த்தனர். நான் எழுதிய கவிதை புத்தகத்தின் பெயர் 'ஊசி உமிழ் ஒளி.' உயர்வதற்கான ஒவ்வொரு படியாக, ஊர்த்துவப் பார்வை, மூலக்கனல், நாற்றிசை நடப்பறிவோம், நந்தவனத்தின் நடுவே என, கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.-----

-------சிவபால மணிகண்டன்,பி.இ., மாணவர்,காஞ்சிபுரம்எனது நண்பர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் 'எழுதுக' இயக்கத்தின் மூலம் மாணவர்கள் புத்தகம் எழுதுவது குறித்த அறிவிப்பை பார்த்தேன். நான் கவிதையின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, நானும் புத்தகம் எழுத பதிவு செய்து, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். 'ஸ்கேல்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளேன. இயல்பான காட்சியையும் வண்ணமயமாக்கும் ஸ்கேலைப் போன்றது.------------------

ஆர்.சந்தியா,பிளஸ் 2,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏகனாம்பேட்டை.எங்கள் வகுப்பாசிரியை 'எழுதுக' இயக்கத்தின் மூலம் மாணவர்கள் புத்தகம் எழுதுவது குறித்த அறிவிப்பை எனக்கு அனுப்பி என்னையும் புத்தகம் எழுத ஊக்கப்படுத்தி வழிநடத்தினார். நான் எழுதிய புத்தகத்தின் பெயர் 'சமுதாய முன்னேற்ற கட்டுரைகள்'. இப்புத்தகத்தில் சமுதாய முன்னேற்றத்திற்கான கருத்துக்களை மையப்படுத்தியுள்ளாதல், என்னுடைய புத்தகத்திற்கு இப்பெயரை வைத்தேன்.நான் சமுதாயத்தில் மாற்ற நினைக்கும் கருத்துக்களையும், இப்புத்தகத்தை வாசிப்பவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றம் காண செயல்படுவர் என்பதில் ஐயமில்லை.----------------

நா. லாவண்யா, கீழம்பி,அறிஞர் அண்ணா மருத்துவ கல்லுாரிஇயற்கை மருத்துவம் & யோகா இரண்டாமாண்டு,காஞ்சிபுரம் நான் படித்த பள்ளியின் ஆசிரியை அவர்கள் இந்த அறிவிப்பை எனக்கு அனுப்பி என்னுடைய பெயரைப் பதிவு செய்து கொள்ளவும் புத்தகம் எழுதவும் என்னை ஊக்கப்படுத்தினார். நானும் எனது தோழிகளான ஷர்மின் மற்றும்ச வுமியா என மூன்று பேர் இணைந்து 'சுனைநீர் முச்சுவையில்' என்ற கவிதை நூல் எழுதியுள்ளோம்.மற்ற ஊற்றுநீரை விட, சுனைநீர் சிறப்பானது. அது போல் எங்கள் கவிதைகளும் மூன்று கவிஞர்களின் ஒன்றிணைந்த படைப்பு என்பதால் முச்சுவையில் உள்ளது. பெண்கள், சமூகம், தேசத்தலைவர்கள், இயற்கை என அனைத்தையும், உள்ளம் கவரும் வகையில் கவிதையாக புணைந்துள்ளோம்.---------------

தி. ஹேமாவதி, பச்சையப்பன் மகளிர் கல்லுாரிகல்லூரி இளங்கலை இறுதியாண்டு எங்கள் கல்லுாரி 'வாட்ஸ் ஆப்' குழுவில் 'எழுதுக' இயக்கத்தின் புத்தகம் எழுதுவது குறித்த அறிவிப்பை பார்த்தேன். நான் எழுதிய புத்தகத்தின் பெயர் 'அனுபவக் கதைகள்'. எதார்த்தமான முறையில் இன்றைய நிகழ்வுகளை அணுகி, பல கருத்துகளை முன்வைத்து கதை வடிவில் இந்நுாலை எழுதியுள்ளேன்.-------------

எஸ்.எம்.அன்பு மொழி, சி.ஏ.,காஞ்சிபுரம்நான் எழுதிய புத்தகத்தின் பெயர் 'BOOKS AND ME' என்ற ஆங்கில புத்தகம். நான் படித்த பள்ளியின் ஆசிரியை அவர்கள் 'எழுதுக' இயக்கத்தின் புத்தகம் எழுதுவது குறித்த அறிவிப்பை எனக்கு அனுப்பி என்னுடைய பெயரைப் பதிவு செய்து கொள்ளவும் புத்தகம் எழுதவும் என்னை ஊக்கப்படுத்தினார். என்னுடைய சிந்தனைகளையும் கற்பனைகளையும் கதையாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். பயிற்சி வகுப்புகள்பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும்போதே மாணவர்களின் அறிவாற்றலையும், புத்தகம் எழுதும் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

'எழுதுக' இயக்கத்தைச் சேர்ந்தோர், மாணவர்களை நெறிப்படுத்தி, இணைய வழியாக தொழில் நுட்பம், ஊடகத்துறை சார்ந்த ஆளுமைகள், கதைக்களம் அமைப்பது உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை அளித்துள்ளனர்.புத்தகம் எழுத வேண்டும் என ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்; அந்த மாணவர்களை புத்தக ஆசிரியராக உருவாக்கலாம் என, 'எழுதுக' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஆசிரியை பூங்குழலி தெரிவித்தார்.எழுதுக அமைப்பின் தொடர்புக்கு:இ - மெயில்: www.ezhuthuga.orgமொபைல்: 63810 20268, 70091 38643

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X