சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு நிலங்கள், வீடுகளில் புகுந்த தண்ணீர்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ஈரோடு:ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்கால் கரை அடுத்தடுத்து உடைந்து, விளை நிலங்கள், கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் கரை அமைத்து, தளம் சீரமைப்பு பணியை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். சீரமைப்பு பணி செய்தால், நிலத்தடி நீர் செறிவூட்டப்படாமல், கசிவு நீரை நம்பி உள்ள, 50 ஆயிரம் ஏக்கர் விளை
 கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு நிலங்கள், வீடுகளில் புகுந்த தண்ணீர்

ஈரோடு:ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்கால் கரை அடுத்தடுத்து உடைந்து, விளை நிலங்கள், கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் கரை அமைத்து, தளம் சீரமைப்பு பணியை பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். சீரமைப்பு பணி செய்தால், நிலத்தடி நீர் செறிவூட்டப்படாமல், கசிவு நீரை நம்பி உள்ள, 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கும் என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனால், வாய்க்காலில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் கான்கிரீட் கரை அமைத்து, பிற இடங்களை மண்ணால் பலப்படுத்த முடிவு செய்தனர். கடந்த 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,000 கன அடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, பெருந்துறை அருகே பெரியவிளாமலை பஞ்., கண்ணவேலம்பாளையம் கிராமத்தில், வாய்க்காலின் இரு கரைகளை தொட்டு தண்ணீர் சென்றது. அங்கு, கரையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.மதகு அமைக்க உள்ள இடத்தில், தண்ணீர் அழுத்தத்தால் நேற்று முன்தினம் இரவு லேசான கசிவு ஏற்பட்டது. பொதுப்பணித் துறையினர் சரி செய்து கண்காணித்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு மீண்டும் கசிவு அதிகரித்து, பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலம், கிராமத்தில் வீடுகள் உள்ள பகுதி, சாலையிலும் தண்ணீர் ஓடியது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவே, கீழ்பவானியில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இருந்தாலும், 50 ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், அதை வடிய வைக்கும் பணி நடந்து வருகிறது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி, கரையை பலப்படுத்தினர். உடைப்பு ஏற்பட்ட இடத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எஸ்.பி., சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தரமற்ற கான்கிரீட் கரை



விவசாயிகள் கூறியதாவது:கான்கிரீட் கரை, தளம் பலப்படுத்துதல் பணியை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்த்தும், மற்றொரு தரப்பு ஆதரிக்கும் நிலையில், கட்டுமான பணி தரமற்றதாக நடந்து வருகிறது. தவிர, கரைகள் பலவீனமாக இருப்பதாக காட்டி, கான்கிரீட் கரை, தளம் பலப்படுத்தும் பணியை தொடர அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்காக எந்த ஆண்டும் இல்லாத வகையில் பல இடங்களில் சிறியதாகவும், இங்கு பெரியதாக உடைப்பை கணக்கு காட்டி உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


10 நாளில் சீரமைக்க உறுதி



அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:வாய்க்கால் உடைப்பு ஏற்பட்ட பகுதி 10 நாட்களில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு, மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். தண்ணீர் திறப்பு காலம் முடிவடைந்த பின், முழுமையாக செப்பனிடப்படும். கரை உடைப்புக்கு தரமற்ற கட்டுமான பணிதான் காரணம் என, உடனே முடிவுக்கு வர முடியாது. முழுமையாக ஆய்வு செய்து, இரு தினங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற கட்டுமானம்தான் காரணம் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இத்திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில், டெண்டர் விடப்பட்டு பணி நடந்து வருகிறது. தண்ணீர் வெளியேறி பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X