பொது செய்தி

தமிழ்நாடு

அறக்கட்டளைக்கான தொகை ரயில்வே நிர்வாகம் வழங்கல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு, ரயில்வே நிர்வாகம், நிலுவை தொகை, 1.40 லட்சம் ரூபாயை வழங்கியது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 2003 - 2018ல் ரயில்வே துறையின், ரயில் பயணச்சீட்டு கணினி முன்பதிவு மையம் இயங்கியது.தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான அலுவலக கட்டடத்தில், இம்மையம் செயல்பட்டது.மாத வாடகை, ஆண்டு ஒப்பந்தம்,

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு, ரயில்வே நிர்வாகம், நிலுவை தொகை, 1.40 லட்சம் ரூபாயை வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 2003 - 2018ல் ரயில்வே துறையின், ரயில் பயணச்சீட்டு கணினி முன்பதிவு மையம் இயங்கியது.தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான அலுவலக கட்டடத்தில், இம்மையம் செயல்பட்டது.

மாத வாடகை, ஆண்டு ஒப்பந்தம், ஆண்டுதோறும் 11 சதவீத வாடகை உயர்வு அடிப்படையில் இயங்கிய மையத்திற்கு, ரயில்வே நிர்வாகம், ஐந்து ஆண்டுகளாக, ஒப்பந்த உரிமத்தை புதுப்பிக்காமல், வாடகையையும் செலுத்தவில்லை.உரிமத்தை ரத்து செய்வதாக, அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்த நிலையில், ரயில்வே வணிக பிரிவு, 2017 ஜூன் வரையிலான நிலுவை தொகையை செலுத்தியது.

தொடர்ந்து, 2018 மார்ச் வரை, வாடகை செலுத்தாமலே, ஒன்பது மாதங்கள் இயங்கி மூடப்பட்டது. இறுதி கால நிலுவையை செலுத்த, ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், மூன்றாண்டுகளாக தராததால், நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது.வழக்கை தவிர்க்க கருதி, ரயில்வே நிர்வாகம், வாடகை நிலுவை, 1.40 லட்சம் ரூபாயை, ஆளவந்தார் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X