செங்கையில் இடி, மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கையில் இடி, மழை

Added : ஆக 21, 2021
Share
மாமல்லபுரம் : வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக சில மாவட்ட பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த இடியுடன் மழை பெய்தது.கூவத்துார் அடுத்த, கடலுார், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில், அன்று நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேற்று பகலிலும் மின் தடை

மாமல்லபுரம் : வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக சில மாவட்ட பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த இடியுடன் மழை பெய்தது.கூவத்துார் அடுத்த, கடலுார், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில், அன்று நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேற்று பகலிலும் மின் தடை நீடித்தது.கேளம்பாக்கத்தில் 5.2; திருப்போரூரில் 4.3; தாம்பரத்தில் 3.4; மதுராந்தகத்தில் 1.4; செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் 0.5 - 0.9 செ.மீ., மழை என பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X