பொது செய்தி

தமிழ்நாடு

'அரசியல் நிர்பந்தத்தால் டிரான்ஸ்பர் உத்தரவு'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:அரசியல் நிர்பந்தத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்கம் மாநில அமைப்பு செயலாளர் வீராசாமி கூறியதாவது:கோவை மின்பகிர்மான வட்டம் சோமையம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் முகவர் பாஸ்கரன்,

கோவை:அரசியல் நிர்பந்தத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர், ஐக்கிய சங்கம் மாநில அமைப்பு செயலாளர் வீராசாமி கூறியதாவது:கோவை மின்பகிர்மான வட்டம் சோமையம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் முகவர் பாஸ்கரன், கிழக்கு ஆலாந்துறை பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த முகவர் செல்வராஜ், சோமையம்பாளையத்துக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசியல் நிர்பந்தத்தால் குறிப்பிட்ட பணியிடம் வழங்க, மின்வாரிய விருப்ப மாறுதல் உத்தரவுக்கு எதிராக, இந்த பணியிட மாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். தொழில் உறவு மோசமடையும். மின்வாரிய அமைச்சர் நிர்பந்தத்தால், இப்பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர், மின்வாரிய தலைமை பொறியாளர் உள்ளிட்டோரிடமும் மனு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X