சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபரீதத்தை அறியாமல் பாம்பனில் படகு சவாரி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் சுற்றுலா பயணியர் ஆபத்தான படகு சவாரி செல்வதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணியர், பாம்பன் கடல் மீது அமைந்து உள்ள பாலத்தில் நின்று ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிக்கின்றனர். ஆர்வ மிகுதியால் சிலர் படகில் சவாரி செல்ல, அங்குள்ள மீனவர்களை நாடுகின்றனர். சில
 விபரீதத்தை அறியாமல் பாம்பனில் படகு சவாரி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, பாம்பன் கடலில் சுற்றுலா பயணியர் ஆபத்தான படகு சவாரி செல்வதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணியர், பாம்பன் கடல் மீது அமைந்து உள்ள பாலத்தில் நின்று ரயில் பாலம், மன்னார் வளைகுடா தீவுகளை கண்டு ரசிக்கின்றனர். ஆர்வ மிகுதியால் சிலர் படகில் சவாரி செல்ல, அங்குள்ள மீனவர்களை நாடுகின்றனர்.

சில மீனவர்கள் சுற்றுலா பயணியரிடம் பணம் வசூலித்து, 'லைப் ஜாக்கெட்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, நாட்டுப் படகில் ஏற்றி பாம்பன் பாலம், ரயில் பாலம் கீழ் பகுதியை சுற்றி காட்டுகின்றனர்.கொந்தளிப்பு மிகுந்த பாம்பன் கடலில், ஆபத்தை உணராத சுற்றுலா பயணியர், சில நேரங்களில் படகில் இருந்தபடி துள்ளிக் குதித்து கைதட்டி மகிழ்வதால், படகு கவிழும் அபாயம் உள்ளது. இது போன்ற விபரீத பயணங்களை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X