பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி: ரூ. 425.40 தினக்கூலி நிர்ணயம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:தோட்ட அதிபர்களுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், 425 ரூபாய், 40 காசுகள் தினக்கூலியை அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 'குஷி' அடைந்துள்ளனர்.தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான நான்காம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, கோவை ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு தோட்ட

கோவை:தோட்ட அதிபர்களுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், 425 ரூபாய், 40 காசுகள் தினக்கூலியை அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 'குஷி' அடைந்துள்ளனர்.தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான நான்காம் கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, கோவை ஏ.டி.டி., காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க பேச்சுவார்த்தை குழு தலைவர் பாலச்சந்தர், செயலாளர் பிரதீப் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொழிற்சங்கம் தரப்பில், தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது, எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால், வேதனையில் இருந்த தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் துறையினரிடம் ஊதிய உயர்வு குறித்து மனு அளித்திருந்தனர்.பேச்சுவார்த்தை நீடித்த சமயத்தில், தினமும், 425 ரூபாய், 40 காசுகள் வழங்க வேண்டும் என அரசாணை பிறக்கப்பட்டுள்ள தகவல், தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் நிம்மதியை தந்துள்ளது.தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அமீது கூறியதாவது:முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது, தினக்கூலியாக, 600 ரூபாய், இரண்டாம் கட்டத்தின்போது, 475, மூன்றாம் கட்டத்தின்போது, 430 ரூபாய் வழங்க கோரினோம்; மூன்று பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.சென்னை தொழிலாளர் துறையினரிடம் முறையிட்டோம். அதன் அடிப்படையில் தற்போது, 425 ரூபாய், 40 காசுகள் என நிர்ணயித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 'அரியர்' விஷயத்தில் தேயிலை தோட்ட நிறுவனத்தினர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.இருப்பினும், அதை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கேரள தொழிலாளர்களை விட, 15 ரூபாய், 41 காசுகள் தினக்கூலி இங்கு அதிகம்.இதன் வாயிலாக கோவை, நீலகிரி, ஏற்காடு, மாஞ்சோலை பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X