மின் விரயம் தவிர்க்க எனர்ஜி எபீஷியன்ஸி மோட்டார்:மானியத்தில் வழங்க விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் விரயம் தவிர்க்க 'எனர்ஜி எபீஷியன்ஸி' மோட்டார்:மானியத்தில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
கோவை:விவசாய பயன்பாட்டில் உள்ள, பழைய மோட்டார்களால் ஏற்படும் மின் இழப்பைத் தவிர்க்க, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும், புதிய ரக மோட்டார்களை, விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:விவசாய பயன்பாட்டில் உள்ள மோட்டார்கள், பெரும்பாலும் மிகப் பழையவை. இவை எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தின் அளவு அதிகம்.மின்

கோவை:விவசாய பயன்பாட்டில் உள்ள, பழைய மோட்டார்களால் ஏற்படும் மின் இழப்பைத் தவிர்க்க, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும், புதிய ரக மோட்டார்களை, விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:விவசாய பயன்பாட்டில் உள்ள மோட்டார்கள், பெரும்பாலும் மிகப் பழையவை. இவை எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தின் அளவு அதிகம்.மின் இழப்பைத் தவிர்க்க, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும், 'எனர்ஜி எபீஷியன்ஸி' ரக மோட்டார்களுக்கு மாறும்படி, விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பொதுவாக, கிணற்று மோட்டார்களை விட, போர்வெல்களுக்குப் பயன்படுத்தும், கம்ப்ரசர் மோட்டார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியவை. இவை, அதிக மின்சாரத்தை எடுத்துக் கொண்டு இயங்குபவை.உதாரணமாக, 5 எச்.பி., திறனுள்ள கிணற்று மோட்டார், ஒரு மணி நேரத்துக்கு 5 யூனிட் எடுத்துக் கொள்ளும். நவீன 'எனர்ஜி எபீஷியன்ஸி' ரக மோட்டார், ஒரு மணி நேரத்துக்கு 3.44 யூனிட் மட்டுமே எடுக்கும்.பழைய கம்ப்ரசர் மோட்டார், ஒரு மணி நேரத்துக்கு 6.20 யூனிட் எடுக்கும். 'எனர்ஜி எபீஷியன்ஸி' வகை கம்ப்ரசர், ஒரு மணி நேரத்துக்கு, 4.13 யூனிட்தான் எடுக்கும்.அதாவது, சாதாரண மோட்டாரை விட, நவீன மோட்டார், 3 மணி நேரத்துக்கு, 4.7 யூனிட் மின்சாரத்தை, மிச்சப்படுத்தும்.சாதாரண கம்பரசரை விட, நவீன கம்ப்ரசர், 12 மணி நேரத்துக்கு, சுமார் 25 யூனிட் மின்சாரத்தை, மிச்சப்படுத்தும்.இதை, பல லட்சம் விவசாயிகளுக்கு, மாதக் கணக்கில் கணக்கிட்டால், கோடிக்கணக்கான மின்சார யூனிட்டுகள் மிச்சமாகும்.எனவே, மின் இழப்பைத் தடுக்க, 'எனர்ஜி எபீஷின்ஸி' ரக மோட்டார்களைப் பயன்படுத்த, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பழைய மோட்டார்களுக்கு மாற்றாக, புதிய 'எனர்ஜி எபீஷின்ஸி' மோட்டார்களை வாங்க, அரசு மானியம் வழங்க வேண்டும். இதன்மூலம், மின் விரயத்தைத் தவிர்க்கலாம்.மின் இழப்போடு ஒப்பிடுகையில், மானியம் தருவது அரசுக்கும் லாபகரமான ஒன்றாகவே இருக்கும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X