பொது செய்தி

தமிழ்நாடு

மங்கள வார உற்சவ பெருவிழா நிறைவு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:கோவை காமாட்சிபுரி ஆதீனம் அங்காளபரமேஸ்வரி, 51 சக்தி பீடம் கோவிலில் மங்கள வார உற்சவப் பெருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.கோவை காமாட்சிபுரி ஆதீனம், அங்காளபரமேஸ்வரி, 51 சக்தி பீடம் கோவில், ஆடி வெள்ளி மங்கள வார உற்சவப் பெருவிழா ஜூலை, 23ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிதோறும், கன்னிமார் வழிபாடு, ஐம்பூத வேள்வி, அலங்கார பூஜை என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.மங்கள

கோவை:கோவை காமாட்சிபுரி ஆதீனம் அங்காளபரமேஸ்வரி, 51 சக்தி பீடம் கோவிலில் மங்கள வார உற்சவப் பெருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.கோவை காமாட்சிபுரி ஆதீனம், அங்காளபரமேஸ்வரி, 51 சக்தி பீடம் கோவில், ஆடி வெள்ளி மங்கள வார உற்சவப் பெருவிழா ஜூலை, 23ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிதோறும், கன்னிமார் வழிபாடு, ஐம்பூத வேள்வி, அலங்கார பூஜை என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.மங்கள வாழ்க்கை பெறவும், கணவன் ஆயுள் பெற்று நீண்ட நாள் வாழ்வு பெறுவதற்காகவும், நல்ல புத்திரப் பேறு உண்டாவதற்கும், குடும்ப கஷ்டங்கள் நீங்கவும், குழந்தைகள் கல்வி பெற்று விளங்கவும், ஆடி மாதத்தில் விரதமேற்று, வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். வெள்ளிதோறும் பக்தர்கள் குடும்பங்கள் நலம்பெறச்செய்யும் வேள்வி பூஜையை, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி, பிரசாதமும் வழங்கினார்.பக்தர்கள், 108 திருமஞ்சள்குட அபிஷேகம், பால்குட அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பன்னீர் குட அபிஷேகம் ஐந்தாம் வெள்ளியான நேற்று, சங்காபிஷேகம் செய்து தெய்வங்கள் அருள் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X