கூவம் கரையோரம் ஆக்கிரமிப்பு; ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூவம் கரையோரம் ஆக்கிரமிப்பு; ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு

Added : ஆக 21, 2021
Share
சென்னை : வானகரம் பகுதியில் கூவம் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், மீனவர் நல சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வானகரம் பள்ளிக்குப்பம் கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து, மீன்

சென்னை : வானகரம் பகுதியில் கூவம் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், மீனவர் நல சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:வானகரம் பள்ளிக்குப்பம் கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து, மீன் மார்க்கெட் அமைப்பதற்கு சட்ட விரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கட்டட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது.இவை, கூவம் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதற்கு தடையாக உள்ளது.

எனவே, சட்ட விரோதமாக கட்டுப்பட்டுள்ள கட்டுமானத்ததை இடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

திருவள்ளூர் கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி, மாசு கட்டப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.இக்குழு, கூவம் ஆற்றில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X