கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்; ரயில்வே போலீசார் சிறப்பு ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்; ரயில்வே போலீசார் சிறப்பு ஏற்பாடு

Added : ஆக 21, 2021
Share
சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று, கொரோனா விழிப்புணர்வு முகாம் ரயில்வே போலீசாரால் நடத்தப்பட்டது. இந்த முகாமை, ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., பொறுப்பு சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க, ரயில்வே போலீஸ் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில், முக கவசம்

சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று, கொரோனா விழிப்புணர்வு முகாம் ரயில்வே போலீசாரால் நடத்தப்பட்டது. இந்த முகாமை, ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., பொறுப்பு சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க, ரயில்வே போலீஸ் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவதன் அவசியம் மற்றும், பாதுகாப்பு குறித்து, பயணியருக்கு அறிவுறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு மற்றும், ரயில்வே பெண் போலீசாரால், கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கொரோனா பரவல், பாதிப்புகள் குறித்தும், தொற்று பரவாமல் தப்புவதற்கான ஆலோசனை கூறும் விதமாக, பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன.இந்நிகழ்ச்சியில், ரயில்வே ஐ.ஜி., கல்பனா நாயக், டி.ஐ.ஜி., ஜெயகவுரி, திருச்சி எஸ்.பி., அதிவீரபாண்டியன், ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை கமிஷனர் செந்தில்குமரேசன் ஆகியோர், கொரோனா தொற்றில் பயணியர் சிக்காமலிருக்க, ஆலோசனை வழங்கினர்.இலவசமாக முககவசம், சானிடைசர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X