பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தூர் மேம்பால பணி வேகம்; விரைவில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செம்பரம்பாக்கம் உபரி நீர் கடக்கும் இடத்தில், மேம்பாலம் கட்டும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. விரைவில் இந்த மேம்பாலம், மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குன்றத்துார் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, அதிக போக்குவரத்து கொண்டது. மழை காலங்களில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், 20 அடி

குன்றத்துார் : குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செம்பரம்பாக்கம் உபரி நீர் கடக்கும் இடத்தில், மேம்பாலம் கட்டும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. விரைவில் இந்த மேம்பாலம், மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குன்றத்துார் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, அதிக போக்குவரத்து கொண்டது. மழை காலங்களில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், 20 அடி எட்டியவுடன், பாதுகாப்பு கருதி, மதகுகளின் வழியாக, உபரி நீர் திறக்கப்படும்.அப்படி திறக்கப்படும் தண்ணீர், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையை கடந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும். அதுபோன்ற நேரத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சிறுகளத்துார், கெலட்டிபேட்டை, நந்தம்பாக்கம் என, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும், இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், 13 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி, 2019, டிசம்பரில் துவங்கியது. மொத்தம், 10 பில்லர்களை உடைய இம்மேம்பாலம், நான்கு வழிப்பாதை கொண்டது.மேம்பாலத்தின் நீளம், 450 அடி; உயரம், 11 அடியாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, மந்தமாக நடந்து வந்த இப்பணி, சில மாதங்களாக வேகமெடுத்து, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.மேம்பால வலது பக்கத்தில், தடுப்பு சுவர் அமைக்கும் பணி மட்டுமே உள்ளது.இதற்காக, ஓரிரு நாட்களில், மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல அனுமதித்து, தடுப்பு சுவர் பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.அப்பணி முடிந்தவுடன், ஓரிரு வாரங்களில், மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X