குளத்தின் அருகே குடிசை மாற்று வாரிய வீடு : இடிந்து விழுந்தால் யார் பொறுப்பு?

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:குனியமுத்துார், செங்குளம் அருகே குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறது. வெள்ளம் சூழாமல் இருக்க, கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டி, தார் சாலை அமைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மாநகராட்சி ரூ.14 கோடி ஒதுக்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.குனியமுத்துார் அருகே உள்ள செங்குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. முழு
 குளத்தின் அருகே குடிசை மாற்று வாரிய வீடு : இடிந்து விழுந்தால் யார் பொறுப்பு?

கோவை:குனியமுத்துார், செங்குளம் அருகே குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறது. வெள்ளம் சூழாமல் இருக்க, கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டி, தார் சாலை அமைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மாநகராட்சி ரூ.14 கோடி ஒதுக்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.குனியமுத்துார் அருகே உள்ள செங்குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கும்போது, அருகாமையில் உள்ள தோட்டங்களில் நீரூற்று ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பருவ மழை பெய்தபோது, 1,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.இச்சூழலில், செங்குளத்துக்கு மிக அருகாமையில், குளத்துப்பாளையத்தில், 6 ஏக்கர் பரப்பளவில், ரூ.57.60 கோடியில், 720 அடுக்குமாடி குடியிருப்பை, குடிசை மாற்று வாரியம் கட்டுகிறது.உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்திலும், அம்மன் குளத்திலும் அடுக்குமாடி குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த சம்பவத்தை மறந்து விட்டு, மீண்டும் அதே தவறை செய்து வருகின்றனர்.இச்சூழலில், குளத்துப்பாளையத்தில் இருந்து பாலக்காடு மெயின் ரோடு வரை, செங்குளத்தின் கரையில் ரோடு போட, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில், ரூ.14 கோடி ஒதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது.செங்குளத்தின் கரையில், பாலக்காடு மெயின் ரோடு முதல் குளத்துப்பாளையம் வரை கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு ரூ.6.75 கோடி, உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் கட்டுவதற்கு ரூ.3.75 கோடி, குளக்கரையில் தார் ரோடு போடுவதற்கு ரூ.3.50 கோடி என, ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு தடையின்மை சான்று கேட்டு, பொதுப்பணித்துறை நீர் வளத்துறை ஆதார அமைப்புக்கு, மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X