பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து லாரிகள் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை: உரிமையாளர்கள் கோரிக்கை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
போத்தனூர்:கோவை மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் தினமும் கட்டுமான பணிக்காக, கல், மணல் கொண்டு செல்கின்றன. பெரும்பாலும் இவற்றில் கூடுதல் பாரம் இருக்கும். இத்தகைய கூடுதல் பாரத்துடன் வரும் லாரிகளுக்கு, எஸ்.பி.,செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி, செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள்
 அனைத்து லாரிகள் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை: உரிமையாளர்கள் கோரிக்கை

போத்தனூர்:கோவை மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் தினமும் கட்டுமான பணிக்காக, கல், மணல் கொண்டு செல்கின்றன. பெரும்பாலும் இவற்றில் கூடுதல் பாரம் இருக்கும். இத்தகைய கூடுதல் பாரத்துடன் வரும் லாரிகளுக்கு, எஸ்.பி.,செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்படி, செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் எஸ்.பி.,யை சந்தித்தனர். 'கூடுதல் பாரம் ஏற்றக்கூடாது' என அறிவுறுத்தினார். தற்போது அனுமதிக்கப்பட்ட அளவு பாரமே, டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.அதே நேரத்தில், வெளி மாவட்டங்களிலிருந்து டிப்பர் லாரிகள் கூடுதல் பாரத்துடன் வருகின்றன. இவற்றுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.இவ்வாகனங்கள் மீதும் நடவடிக்கை கோரி, நேற்று மதியம், மதுக்கரை - நீலம்பூர் பை-பாஸ் சாலையில், கஞ்சிக்கோனாம்பாளையம் பிரிவை அடுத்துள்ள தனியார் இடத்தில், டிப்பர் லாரிகள் நிறுத்தப்பட்டன.கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் அர்ஜூன், பாலகிருஷ்ணன் கூறியதாவது:மாவட்ட எஸ்.பி., கூடுதல் பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு, அபராதம் விதிப்பதை வரவேற்கிறோம். அதே வேளையில் சூலூர், காரணம்பேட்டை, காரமடை, கரூர் போன்ற பகுதிகளிலிருந்து வரும் லாரிகளுக்கு, அபராதம் விதிப்பதில்லை.இவர்களிடம், கூடுதல் பாரத்துடன் வர வேண்டாம் என கூறியும் கேட்கவில்லை. மக்கள் அவர்களிடம்தான் பொருட்களை வாங்குகின்றனர். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆதலால் மாவட்டத்திற்குள், கூடுதல் பாரத்துடன் வரும் அனைத்து டிப்பர் லாரிகள் மீதும், ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகமும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வரின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்லவே, இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை துவக்கியுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X