முன்னாள் மருத்துவ மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மருத்துவ மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா 

Added : ஆக 21, 2021
Share
கோவை:கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, முன்னாள் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் தொடக்க விழா, நேற்று நடந்தது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயின்ற, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.இதில், சுமார் 2,500 முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற மருத்துவக்கல்லுாரிக்கு நன்றி கடன்
 முன்னாள் மருத்துவ மாணவர்  கூட்டமைப்பு துவக்க விழா 

கோவை:கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, முன்னாள் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் தொடக்க விழா, நேற்று நடந்தது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயின்ற, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.இதில், சுமார் 2,500 முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற மருத்துவக்கல்லுாரிக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக, ஒன்று சேர்ந்துள்ளனர். மருத்துவ கல்வி வசதிகளை தரம் உயர்த்தும் நோக்கத்துடன், இந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக, அமெரிக்காவில் பணியாற்றும் டாக்டர் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்படுத்தப்பட்ட, இணையவழி நுாலகத்தை, மருத்துவமனை டீன் நிர்மலா திறந்து வைத்தார். அதேபோல், உருவகப்படுத்துதல் ஆய்வகம் (சிமுலேசன் லேப்) மற்றும் ஆராய்ச்சிக்கூடம் திறக்கப்பட்டது.தொடர்ந்து, டாக்டர்கள், நர்ஸ்கள் பயிற்சிக்கென, மின்னணு ஸ்மார்ட் போர்டு ஒன்றும் வழங்கப்பட்டது. அதன்பின், அரசு மருத்துவக்கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X