பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து நாள் விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; இந்து முன்னணி முடிவு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
கோவை:விநாயகர் சதுர்த்தி விழா ஐந்து நாள் விழாவாக நடைபெறும் என்று, இந்து முன்னணி அறிவித்துள்ளது.இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் , காந்தி பார்க் மாரண்ண கவுடர் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்து பேசியதாவது: கோவையில் இந்த ஆண்டு, விநாயகர்

கோவை:விநாயகர் சதுர்த்தி விழா ஐந்து நாள் விழாவாக நடைபெறும் என்று, இந்து முன்னணி அறிவித்துள்ளது.இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் , காந்தி பார்க் மாரண்ண கவுடர் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்து பேசியதாவது: கோவையில் இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக இந்து முன்னணி சார்பாக, ஐந்து நாட்கள் நடைபெறும். திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் நடைபெறும்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை, இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழகத்திலிருந்து கனிம வளங்களை, கேரளாவுக்கு கடத்தும் கும்பல்களை கணடுபிடித்து, அவர்களை தண்டிக்க வேண்டும்.அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை சீல் வைக்க வேண்டும். தலிபான் அரசுக்கு ஆதரவாக, தமிழகத்தில் சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை, மத்திய அரசு கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில செயலாளர் கிஷோர் குமார் சிறப்புரையாற்றினார். கோட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X